புத்தாண்டில் 2500 குடும்பங்களை இலக்காகக் கொண்ட சமூக சமையலறை வேலைத்திட்டம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை மையமாகக் கொண்ட சமூக சமையலறை திட்டம் நேற்று (01) ஆரம்பமானது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். கொம்பனித்தெரு பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஹுனுபிட்டிய, கொம்பனித்தெரு, காலி முகத்திடல், இப்பன்வல, வேகந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள், உணவு கிடைப்பதில் சிரமம் உள்ள 2500 குடும்பங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சமூக சமையலறைத் … Read more

வெகுஜன ஊடக அமைச்சில் புதிய வருடத்தில் கடமைகள் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டில் வெகுஜன ஊடக அமைச்சில் ஊழியர்கள் கடமைகளை ஆரம்பிப்பதற்கான் வைபவம் இன்று (01) காலை அந்த அமைச்சின் வளாகத்தில் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.. செயலாலரினால் தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.

சாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களிடம் நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளன, அவை அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கப்படும் போது, அவர்களுக்கு QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன

பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக நீல் பண்டார ஹபுஹின்ன பதவியேற்றார். அவர் அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார். பல அமைச்சுக்களில் செயலாளராக பதவி வகித்த அவர், இந்த அமைச்சின் செயலாளராக பதவி ஏற்கும் முன்னர் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.

நாடு எதிர்பார்த்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன

சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பதிலும், கடமைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதும் அரச ஊழியர்களின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு.தினித் சிந்தக கருணாரத்ன இன்று (02) தெரிவித்தார். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தாய்நாடு கோரும் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேணடும என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர்கள் 2023 ஆம் … Read more

நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை 600 கோடி ரூபா

கடந்த வியாழக்கிழமை 400 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை 200 கோடி ரூபாயும் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். . நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் நடவடிக்கை அடுத்துவரும் இரண்டு வாரங்களில் முழுமையாக நிறைவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கூறினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி விவசாயிகளுக்காக 800 கோடி ரூபாவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அலுவலக பணிக் குழாம் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி அலுவலக பணிக் குழாம் 2023 புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01)  காலை இடம்பெற்றது. . இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி கடமைகளை ஆரம்பித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1,996 வீடுகள் – கலைஞர்களுக்கு 108 வீடுகள்

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் … Read more