டெல்லி: டிராக்டர் பேரணி: கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து விபத்தில் உயிரிழப்பு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளியேவந்த நிலையில் தான், நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வே சாலையில் செல்லும்போது இந்த கார் விபத்து நடந்துள்ளது. அவர் … Read more

`திமுக பொங்கல் கரும்பு கொள்முதலில் அடித்த பணத்தை உள்ளாட்சித் தேர்தலில் செலவிடுகிறது' – அண்ணாமலை

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு உப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் பி.ஜே.பி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் சின்ன ஆஸ்பத்திரி அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அண்ணாமலை காலை 9 மணிக்கு வந்து விடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் வருவதற்கு தாமதமானதால் மேடையில் ரஜினி பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தனர். நேரம் ஆக… ஆக கூட்டம் கலையத் தொடங்க அண்ணாமலை வந்து … Read more

அரியலூர் மாணவி தற்கொலை விசாரணை; வழக்கு பதிந்தது சி.பி.ஐ!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அது தொடர்பான வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தடையில்லை என்று உத்தரவிட்டது. சி.பி.ஐ மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு மாணவியின் தந்தை 4 வாரங்களில் பதில் மனு அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள் இந்த … Read more

“ ஆளுமையான நடிகர் அவர். அவருடன் நடிக்க விருப்பம்" – தீபிகா படுகோன் பதில்!

தீபிகா படுகோன் சமீபத்தில் நடித்து வெளியான ‘Gehraiyaan’ அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கான ப்ரோமஷனுக்காக தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அல்லு அர்ஜுடன் பணியாற்ற விருப்பமாக உள்ளேன். வியக்கத்தக்க ஆளுமை அவர்” எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஷாரூக் கானுடன் பதான், ஹிருத்திக் ரோஷன் உடன் பையிட்டர், Intern ரீமேக், பிரபாஸ் உடன் ஒரு படம் என பிசியாக இருக்கும் தீபிகாவின் விருப்பப் பட்டியலில் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் உள்ளனர். … Read more

கேரளா: மலை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு!

கேரள மாநிலம், பாலக்காடு பகுதிக்கு அருகிலுள்ள செராடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 7-ம் தேதி அங்குள்ள குறும்பச்சி மலைக்கு தன் நண்பர்கள் இரண்டு பேருடன் மலையேற்றம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கால் தவறி விழுந்த பாபு செங்குத்தான பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்த தகவல் அறிந்து கொச்சின் கப்பல் படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. பின்னர் … Read more

Kacha Badam: வேர்கடலை வியாபாரி டு வைரல் பாடகர் பூபன் பத்யாகரின் கதை தெரியுமா?

`மேற்கு வங்க மாநிலத்தில் குரல்ஜூரி என்னும் கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வருபவர் தான் இந்த ‘பூபன் பத்யாகர்’. எப்போதும் பாடல் பாடிக்கொண்டே வேர்க்கடலை விற்று வருவதுதான் இவரது இயல்பு. அவ்வாறு வேர்க்கடலை விற்றுக்கொண்டே ‘கச்சா பாதாம்’ என்று வாயில் முணுமுணுத்த படி இவர் பாடிய பாடலுக்கு ரசிகரான அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், கடலை விற்றுக்கொண்டே பாடல் பாடும் பூபன் பத்யாகரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதற்குப்பின் அவரது கிராம மக்கள் … Read more

`இந்தியர்களே… உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்!' – இந்திய தூதரகம் அறிவுரை

ரஷ்யாவும் உக்ரைனும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள். ஏற்கெனவே இரு நாடுகளுக்கு மத்தியில் மோதல் போக்கு நிலவிவந்தாலும், எப்போது உக்ரைன் அமெரிக்காவின் நேட்டா வில் இணைய முடிவு செய்ததோ அப்போதிலிருந்து பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. … Read more

“ரஷ்யா எங்கள் மீது நாளை போர் தொடுக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது!" – உக்ரைன் அதிபர்

உக்ரைன் எல்லையில் கடந்த சில நாள்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதனால், இந்த விவகாரம் உலக அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது முகநூல் பக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மீது நாளை (பிப்.16) தாக்குதல் நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைக்கு அருகில் ரஷ்ய ராணுவம் சுமார் ஒரு லட்சம் தரைப்படைகளையும், போர் தளவாடங்களையும் … Read more

`டெட்’ தேர்வுடன் `நீட்’ தேர்வை அண்ணாமலை ஒப்பிடுவது சரியா?! – ஓர் அலசல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தில், தமிழக தி.மு.க அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வையும், ஆசிரியர் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் ‘டெட்’ தேர்வையும் ஒப்பிட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். டெட் தேர்வு “ஆசிரியர் பணிக்கு பி.எட் தேர்வு மதிப்பெண் இருந்தும், ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் … Read more

ஊர்ப்புறப் பாட்டால் உயரம் தொட்ட படம்! #My Vikatan

தன் காதலியின் கணவனைக் காப்பாற்றத் தன் இன்னுயிரையே ஈன்ற நாயகனைக் கண்டது நம் தமிழ்த் திரையுலகம். அது ‘நெஞ்சில் ஓர் ஆலய’மாக இன்று வரை நின்று நிலைக்கிறது. அதைப்போலவே தான் காதலித்த ஆணுக்காக ஒரு பெண் தன் பிராணனை விட்ட கதையும் உண்டு.  அதுதான் 44 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘அன்னக்கிளி’. 1976-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் முதல்முறையாக இசையமைத்த ‘ராசய்யா’ இன்று இசைஞானியாக வளர்ந்து, இமயமென உயர்ந்து நிற்கிறார். … Read more