"ஆக்ரோஷமான சிராஜுக்கு அபராதம்; தகாத வார்த்தை பேசிய கில்லுக்கு ஒன்றுமில்லை" – ICC-ஐ விமர்சித்த பிராட்

இங்கிலாந்து, இந்தியா இடையே லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 முதல் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளை விடவும் ஆக்ரோஷமாக ஆடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மூன்றாம் நாளின் இறுதியில் இங்கிலாந்து ஒப்பனர்கள் ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். நாளின் கடைசி ஓவரை பும்ரா பந்துவீசிக்கொண்டிருந்தபோது ஜாக் க்ராவ்லி வேண்டுமென்றே நேரத்தைக் கடத்தும் … Read more

'கைத்தலம் பற்றுதல்' – காதலனைக் கரம்பிடிக்கும் பிக் பாஸ் ரித்விகா – வைரலாகும் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்!

பல குறும்படங்களில் நடித்திருக்கும் ரித்விகா, சினிமாவில் தனது முத்திரையை பதிக்க பல்வேறு முயற்சிகள் செய்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவர். பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், ரித்விகா. அதற்குப் பின்னர், பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் ‘மேரி’ கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையடுத்து இருமுகன், ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் இரண்டாவது … Read more

Aadhavan: "எம்.ஜி.ஆருக்குப் பிறகு சரோஜா தேவி அம்மாகூட டூயட் பாடினது நான்!"- பகிர்கிறார் ரமேஷ் கண்ணா

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவருடனும் நடித்தவர் என்ற பெருமை ‘கன்னடத்து பைங்கிளி’ சரோஜா தேவிக்கு உண்டு. இவர் தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘ஆதவன்’ படத்தில் நடித்திருந்தார். சரோஜா தேவி அதுவே இவர் நடித்த கடைசி தமிழ் திரைப்படம். … Read more

Saroja Devi: 'எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா; கண்கள் ததும்புகின்றன'- கமல்ஹாசன்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று (ஜூலை 14) காலமாகி இருக்கிறார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சரோஜா தேவி அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சரோஜா தேவி அவர்களின் மறைவிற்கு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ என்னைப் பார்க்கும் இடமெல்லாம் – என் எந்த … Read more

கடும் நிதித் தட்டுப்பாடு – மதுக்கடை திறந்து ரூ.14,000 கோடி திரட்ட மகா., அரசு முடிவு!

மகாராஷ்டிரா அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. அரசு ஒப்பந்ததாரர்களுக்குக்கூட சரியாக பணம் கொடுக்கவில்லை என்று அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மொத்தம் ரூ.90 ஆயிரம் கோடி அளவுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு அரசு பாக்கி வைத்திருக்கிறது. இதையடுத்து நிதி நெருக்கடியை சமாளிக்க கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மதுபானங்களின் விலையை மாநில அரசு … Read more

Saroja Devi: “ஐகானிக் சரோஜா தேவி அம்மா இனி இல்லை, ஆனாலும்..'' – இரங்கல் தெரிவித்த சிம்ரன்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி. கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேஷனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார்.  Actress Saroja Devi 1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த இவர்  உடல்நலக் குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அவரின் மறைவிற்கு … Read more

Saroja Devi: "பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நம்முடன் இல்லை" – இரங்கல் தெரிவித்த ரஜினி

நடிகை சரோஜா தேவி இயற்கை எய்தியிருக்கிறார். 87 வயதான அவர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தியிருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரோஜா தேவி நடிகை சரோஜா தேவி குறித்து நடிகை குஷ்பு, “ஒரு சினிமா சகாப்தம் முடிவுக்கு வருகிறது. சரோஜா தேவி அம்மா எல்லாக் காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் அவரைப் போல பெயரையும் புகழையும் அனுபவித்ததில்லை. அவர் மிகவும் அன்பானவர். … Read more

'வாழை' பட லாரி கவிழும் காட்சி – சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். நெஞ்சு வலி ஏற்பட்ட அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக உறுதிபடுத்தியிருக்கின்றனர். இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் … Read more

'2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்!' – எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அந்தவகையில்   ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  எடப்பாடி பழனிசாமி “எனது சுற்றுப்பயணத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி இருப்பதைக் காண முடிகிறது. திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர். தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன. அதனால் மேலும் சில கட்சிகள் அதிமுக … Read more

SarojaDevi: “தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும்.." – சரோஜா தேவி மறைவு குறித்து நடிகை குஷ்பு

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனது இல்லத்தில் காலமானார். காவல் அதிகாரியான சரோஜா தேவியின் தந்தை சரோஜா தேவி நடிப்பின் பக்கம் வருவதற்கு மிக முக்கியமான காரணம். ‘மகாகவி காளிதாசா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர், சிவாஜி கணேசனின் ‘தங்கமலை ரகசியம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் தடம் பதித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலருடனும் … Read more