நைஜீரியா: கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலை… 118 கைதிகள் தப்பி ஓட்டம்! – தேடுதல் வேட்டை தீவிரம்

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாக்கு அருகே உள்ள சுலேஜாவில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால், அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 118 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், நைஜீரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் அடமு துசா வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவிலும் பல மணி நேரம் கனமழை பெய்தது. நைஜீரியா சிறை இதனால் நைஜர் மாநிலத்தின் சுலேஜா நகரில் உள்ள சிறைச்சாலையின் பாதுகாப்பு … Read more

`NOTA-க்கு அதிக வாக்குகள் விழுந்தால் என்ன நடக்கும்?' – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஒவ்வொரு தேர்தலின்போதும் `நோட்டா (NOTA)’ என்ற வார்த்தை அனைவர் மத்தியிலும் உலாவரும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசிப் பொத்தானாக அமைந்திருக்கும் இந்த NOTA-வின் விரிவாக்கம் `None of The Above’. அதாவது, EVM-ல் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்கு செலுத்த விருப்பமில்லை என்பதையும் ஒரு வாக்காகப் பதிவு செய்ய நோட்டா பொத்தான் வைக்கப்பட்டிருக்கும். இது முதல்முறையாக 2013-ல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சேர்க்கப்பட்டது. NOTA – நோட்டா அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற … Read more

EVM & VVPAT: “உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த பலமான அறை..!" – பிரதமர் மோடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் உட்பட பலதரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்துவந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது VVPAT ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவிகிதம் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ADR மனு தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்தியாவின் மக்கள்தொகை அதிகம். இப்போது வாக்குச் சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது. தொழில்நுட்ப ரீதியாகத் தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் … Read more

Samantha: “இன்றுவரை இடைவிடாத போராட்டம்தான்" – நடிகை சமந்தா ஓபன் டாக்

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘நீ தானே என் பொன்வசந்தம்’, ‘நான் ஈ’, ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘24’, ‘ஜானு’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’, ‘குஷி’ என தமிழ், தெலுங்கு படங்களைத் தாண்டி, தற்போது இந்தி வரை சென்று தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பல்லாவரம் டு பாலிவுட் வரையிலான அவரது திரைத்துறைப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்ததில்லை. 22 வயதிலிருந்தே … Read more

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு… ஆயுதங்கள் கொடுத்து உதவிய இருவர் பஞ்சாப்பில் கைது!

மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இரண்டு பேர் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ஆற்றில் வீசிச்சென்று இருந்தனர். அந்த ஆற்றில் இரண்டு நாள் தேடுதல் நடத்தி இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் பகுதி பாகிஸ்தான் எல்லையையொட்டி இருப்பதால் குற்றவாளிகள் எளிதாக அங்கு பதுங்கிக்கொள்கின்றனர். இத்துப்பாக்கிச்சூட்டிற்கு … Read more

மும்பை: தொகுதி பங்கீட்டு, வேட்பாளர் தேர்வு… இழுத்தடிக்கும் கட்சிகள்; குழப்பத்தில் தொண்டர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக இன்று நடக்கும் தேர்தலில் எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மராத்வாடா மற்றும் விதர்பா தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அகோலா தொகுதியில் பிரகாஷ் அம்பேத்கரும், அமராதி தொகுதியில் நடிகை நவ்னீத் ரானாவும் போட்டியிடுகின்றனர். நவ்னீத் ரானா கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இப்போது பா.ஜ.க சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு அனைத்து … Read more

`அரசு இதை செய்யச் சொன்னால் இந்தியாவிலிருந்தே நாங்கள் வெளியேறுவோம்!' – டெல்லி நீதிமன்றத்தில் WhatsApp

உலகின் பலகோடி மக்கள் ஆன்லைன் மெஸ்ஸேஜிங் தளமான வாட்ஸ்அப்பை (WhatsApp) பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) இருப்பதால், அதாவது வாட்ஸ்அப்பில் அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முடியும் என்பதால், தங்களின் பிரைவசிக்காக (Privacy) மக்கள் அதிகளவில் இதைப் பயன்படுத்திவருகின்றனர். வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் (meta) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கூட, `வாட்ஸ்அப் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் இருக்கும் ஒரு நாடு… … Read more

SRH v RCB: "நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!" – ஹைதராபாத்தைச் சுருட்டிய பெங்களூரு சுழல் சூறாவளி

“இதயம் பலவீனமானவர்கள், முதியவர்கள், குழந்தை மற்றும் பிரக்னன்ட் லேடீஸ் தயவு செய்து இந்த மேட்ச்ச பாக்காதீங்க” என்ற பொறுப்புத்துறுப்போடு, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹைதராபாத்தில் மோதின. பெங்களூரு அணிக்கு இது 250வது ஐ.பி.எல் போட்டி என்பதால் பெங்களூரு அணி ரசிகர்களும், “ஹைதராபாத் 250 ரன்ன 10 ஓவர்ல அடிப்பாங்களா இல்ல 11 ஓவர்ல அடிப்பாங்களா?” எனக் குழப்பம் இருப்பதால் சென்னை, மும்பை அணி ரசிகர்களும் இப்போட்டிக்காகக் காத்திருந்தனர். டாஸ் வென்ற பெங்களூரு … Read more

நட்சத்திரப் பலன்கள் ஏப்ரல் 26 முதல் மே 2 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link