லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? – இயக்குநர் அமீர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் அமீரும் அஜித்குமாரின் மரணம் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.  அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம் இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “காவல்துறை என்பது முழுக்க முழுக்க மக்கள் பக்கம் இல்லை என்று பல நூறு முறை சொல்லி இருக்கிறேன். அது அதிகாரத்தின் பக்கம்தான் … Read more

பாஜக: புதுச்சேரி, மகா. உட்பட 9 மாநிலங்களுக்குப் புதிய தலைவர்கள்; தேசியத் தலைவர் தேர்தல் எப்போது?

பா.ஜ.க-விற்குத் தேசியத் தலைவர் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. ஏற்கெனவே பா.ஜ.க-விற்கு 28 மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். பா.ஜ.க தேசியத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் 19 மாநில பா.ஜ.க தலைவர்கள் தேவை. தற்போது 28 மாநிலத்திற்குத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால் புதிய தேசியத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. ஆனால் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்ட பிறகுதான் தேசியத் … Read more

“அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' – வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்களை மிரட்டிய எஸ்பி

சர்ச்சையான எஸ்.பி பேச்சு சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு படி ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை கேட்டு போராடியவர்களை பார்த்து, மாவட்ட எஸ்.பி கண்ணன் மிரட்டும் தொனியில் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. வெடி விபத்தில் 9 பேர் பலி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கமல் குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு … Read more

Kids hair care: குழந்தைகளுக்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்!

இப்போதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே இளநரை வந்துவிடுகிறது. அதனால், குழந்தைப்பருவத்தில் இருந்தே தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்கிற சரும நோய் நிபுணர் சந்தன், அதற்கான டிப்ஸையும் பகிர்கிறார். Children hair care * மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது சருமவகைக்கு ஏற்ப குழந்தை நல நிபுணரின் பரிந்துரையின் பேரில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். * ஒருநா‌ள்‌வி‌ட்டு ஒருநாளாவது குழ‌ந்தையைத் தலை‌க்குக் கு‌ளி‌க்கவை‌க்க வே‌ண்டு‌ம் * குழந்தைகளைக் குளிக்கவைக்க மிதமான சூடான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அதிகமாகக் குளிர்ந்த … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 3 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்… அதிர்ச்சி பின்னணி!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கையெழுத்திட்டு பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் – அப் முகப்பு படமாக ( whatsapp dp) பயன்படுத்தி வருகிறார். cyber crime இந்த நிலையில், அதே புகைப்படத்தை முகப்பாகக் கொண்ட ஒரு எண்ணில் இருந்து முக்கிய நபர்கள் பலருக்கும் வாட்ஸ் – அப் … Read more

Vijay : 'கொடூரமா இருக்கு… இப்படி நடக்கவே கூடாது!' – அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதரரிடமும் விஜய் எமோஷனலாக பேசியிருக்கிறார். விஜய் தவெக சார்பில் அஜித்தின் காவல் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். வருகிற 6 ஆம் தேதி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர். இந்நிலையில்தான், தவெக தலைவர் விஜய் சிவகங்கைக்கு நேரில் சென்று உயிரிழந்த அஜித் … Read more

ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?

ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராமங்கள் வறண்ட நிலங்களாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், இங்கு புதிதாக குடியேற விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு பெரும் ஊக்கத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக ஸ்விசர்லாந்தில் உள்ள Monti Scìaga, Albinen, Valais, Corippo போன்ற கிராமங்கள் குடியேறுபவர்களுக்கு சுமார் 50 லட்சம் … Read more