டோக்யோ ஒலிம்பிக் விழா – ஜப்பான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுகின்றன. இந்த வருடமும் கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் ஜப்பான், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என இதுவரை 80 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் – தன் தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய டெரிக் ரெட்மண்ட் ஒலிம்பிக் கனவுடன் தடைகளை உடைத்த 3 … Read more டோக்யோ ஒலிம்பிக் விழா – ஜப்பான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து வளர்மதி விடுவிப்பு: அதிமுக அறிவிப்பு

அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த வளர்மதி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அதேபோல் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருந்த வைகைச்செல்வன் அவர்களும் விடுவிக்கப்படுவதாகவும் அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது அதற்கு பதிலாக வளர்மதி அவர்களுக்கு செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்பும் வைகைச்செல்வன் செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மரகதம் குமரவேல் என்பவருக்கு செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு மகளிரணி செயலாளர் பொறுப்பும் வெங்கட்ராமன் மற்றும் ஆனந்தராஜா … Read more இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து வளர்மதி விடுவிப்பு: அதிமுக அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: கோலாகல தொடக்கம்!

கடந்த 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை. ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, இந்திய நேரப்படி இன்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சார்பாக சுமார் 11,300-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் போட்டியிட … Read more டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: கோலாகல தொடக்கம்!

பெகாசஸ் உளவு… கி வீரமணி கண்டன அறிக்கை!

உலகத்தையே இன்று ஆட்டம் காண வைத்துள்ள சொல்லாக பெகாசஸ் உளவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து திராவிடர் கழகத்தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:- இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த மென்பொருள்மூலம் உலகின் பல நாடுகளிலும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஆயிரம் குடிமக்களின் செல்பேசி இணைப்புகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது. அபாயகரமானது. மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்துவது என்பது போதுமானதல்ல, உரியவர்களைக் கொண்ட தனி சிறப்பு விசாரணை உச்சநீதிமன்ற … Read more பெகாசஸ் உளவு… கி வீரமணி கண்டன அறிக்கை!

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு! தெலங்கானா மாநிலத்தில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் மொத்தம் 39 பயணிகளும் நடத்துனர் மற்றும் ஓட்டுநரும் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்து ஸ்டேஷன்பூர் என்ற பகுதியில் வந்தபோது திடீரென பேருந்தின் பின்பக்கம் இருந்து புகை வந்தது இதை பார்த்த … Read more சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

செமஸ்டர் தேர்வுகள் ரத்து. பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்திற்கு அருகுள் உள்ள பகுதி புதுசேரி யூனியன் பிரதேசம். இம்மாநிலத்தில் நடைபெற இருந்த செமஸ்ட்ர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனப் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாவது: புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருந்த முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும், இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும் 1900க்குள் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,830 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25,44,870 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,830 பேர்களில் 130 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 24 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் … Read more தமிழகத்தில் இன்றும் 1900க்குள் கொரோனா பாதிப்பு!

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மீண்டும் கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு ஏற்கனவே 10 முறை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 11வது முறையாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்த ஆணையத்திற்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு … Read more ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மீண்டும் கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு!

குஷ்பு டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்? சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யார் என கேட்டு ட்விட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியதாக தகவல் வெளிவந்துள்ளது நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது. இதனை அடுத்து தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தனது ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கடந்த 20ஆம் தேதி டிஜிபி டிஜிபியிடம் நடிகை குஷ்பு புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடிகை குஷ்புவின் … Read more குஷ்பு டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்? சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

திங்கள் வரை மக்களவை ஒத்திவைப்பு!

பெகாசஸ் விவகாரத்தை மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.    மத்திய மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.   இந்நிலையில் பிற்பகல் அவை துவங்கப்பட்ட போது பெகாசஸ் விவகாரத்தை மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.