மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்,

பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  மார்ச் 31ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் … Read more

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பாகும்

• அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும் – சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125 ஆண்டுபூர்த்தி விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அத்துடன், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசியல்வாதிகள் விளையாட்டுக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பதை தடுக்க முடியுமானால் சிறந்தது என்றும் கூறினார். கொழும்பு … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை டிஜிட்டல் மயமாக்கப்படும் என்ற நற்செய்தியுடன் மாத்தளை சென்ற ஜயகாமு ஸ்ரீலங்கா இன்று இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுடன் வவுனியாவிற்கு வருகை தந்துள்ளது.

உலகம் தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில், தீர்வுகளை விரைவில் மேற்கொள்ள வேண்டிய நிலை நாட்டில் உள்ள பலருக்கு நம்பிக்கைக் கலங்கரை விளக்காக மாறியுள்ளது. நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில், தொழிலாளி தனது வேலைத்தளத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், அதை தீர்வு காண்பதற்கு இடையிலான தாமதம் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரஅவர்களின் நடைமுறைப்படுத்தப்பட உள்ள டிஜிட்டல் முறையானது வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சர் … Read more

பொருளாதாரத்தை  வெற்றிகரமாக முடித்தவர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 

பொருளாதார சவாலை எதிர்கொள்வது ‘தற்கொலைசெய்து கொள்வதற்கு சமமானது ‘ இது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது  என தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (29) வலியுறுத்தினார்,  பணவீக்கத்தைக் குறைத்தல், அந்நிய செலாவணி  விகிதங்களை மேம்படுத்தல் மற்றும் சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் தேர்தலின் போது பிரயோஜனம் அடைய முடியும்  என தகவல் தெரியாத குழு நம்புவதாகவும், இது அத்தகைய குழுக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தெளிவாக நிரூபிப்பதாகவும் அமைச்சர்  … Read more

முரண்பாடுகளைத் தடுத்தல் மற்றும் தீர்க்கும்போது ஒரு கருவியாக பாராளுமன்ற இராஜதந்திரம் முன்னிலை பெற்றுள்ளது – ஜெனீவா மாநாட்டில் சபாநாயகர்

ஜெனீவாவில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 148வது மாநாட்டில் கௌரவ சபாநாயகர் தலைமையிலான இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளனர். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு 2024 மார்ச் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சுவிட்சலாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 148வது மாநாட்டில் பங்கெடுத்தது. பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ சுமித் உடுகும்புர, … Read more

அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஜனாதிபதி நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் வழங்கப்படும் பங்களிப்பு அதிகரிப்பு

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபாய் 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான … Read more

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது – சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர … Read more

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய அணுகுமுறை ஜனாதிபதி தலைமையில் அறிமுகம்

• மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கான சட்டமூலங்கள் விரைவில் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு. இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை சிக்கிக்கொள்ளக்கூடிய இணைய பக்கங்கள், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட காரணங்களால் சிறுவர்கள் பெருமளவில் சைபர் வலையப்பிற்குள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, … Read more

மட்டக்களப்பில் அரசாங்க அதிபர் தலைமையில்  மாவட்ட இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் (27) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது. புனித றமழான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பிருந்து அதனை முடிவுறுத்தும் 16வது நாள் இப்தார் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.எச்.எம். பசீல், தொழில் நியாயாதிக்க சபை தலைவர் வீ.எம். சியான் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். மாவட்ட … Read more

நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024மார்ச் 28ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று … Read more