பழமையான பொருளாதார முறைமைக்குப் பதிலாக 2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பழமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாடிதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது வெளிநாட்டு அந்நியச்செலாவணியே என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார். … Read more

விமான சேவைகள் உயர் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய எயார் பஸ் நிறுவனம் :நிமல் சிறிபால டி சில்வா

இலங்கை விமான சேவையின் உயர் அதிகாரியொருவருக்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் பெரும்தொகையொன்றை லஞ்சமாக கொடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலல டி சில்வா தெரிவித்துள்ளார்.  துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.  ஆதாரங்கள் எயார் பஸ் நிறுவனம் இலங்கை விமான சேவையின் உயர் அதிகாரியொருவருக்கு லஞ்சம் வழங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் … Read more

பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியம் – சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றின் பிரதிநிதிகளே மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளனர். கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இன்று (06) நடந்த நீண்ட, வட்டமேசை கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இந்த … Read more

மேலதிகமாகவுள்ள உணவு பொருட்களை சேமித்து உணவு வங்கியை உருவாக்குவது தொடர்பாக யாழ் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் ஆராய்வு

மேலதிகமாகவுள்ள உணவு பொருட்களை சேமித்து உணவு வங்கியை உருவாக்குவது தொடர்பாக யாழ் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இதனூடாக நலிந்த மற்றும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு உணவு வழங்குதல், வங்கிகள் ஊடாக விவசாயிகளுக்கு கடன் உதவிகளை வழங்குதல் போன்ற விடயங்களிலும் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் … Read more

தேரரின் தகாத உறவு! கையும் களவுமாக பிடித்த மக்கள்

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருடன் தேரர் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்டு வந்தநிலையில் வசமாக சிக்கிய சம்பவம் ஹிதிகஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளது. ஹிதிகஸ்ஸ விகாரையின் விஜயநந்த தேரர் என்பவரே இவ்வாறு தகாத உறவில் இருந்து ஊர்மக்களிடம் வசமாக மாட்டியுள்ளார். பொலிஸாருடன் விகாரைக்கு விரைந்த மக்கள்  குறித்த தேரர் இதற்கு முன்னர் ஊர்மக்கள் சிலர் மீது வழக்கு தொடர்ந்து சில பிரச்சினைகளை உருவாக்கியவர் என்றும் குறித்த காணொளியை பதிவு செய்தவர் தெரிவித்துள்ளார். தேரரின் நடவடிக்கைகளை அவதானித்து வந்த ஊர் … Read more

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு நேற்று கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். பழமையான பொருளாதாரத்தின் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடியாது இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு … Read more

இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 5300 கோடி டொலர்கள்! பெரிய வர்த்தகர்கள் குறித்து பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள தகவல்

நாட்டின் மொத்த கடனையும் அடைக்கக்கூடிய அளவிலான 53 பில்லியன் (5300 கோடி) டொலர்களை, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய வர்த்தகர்கள் நாட்டிற்கு செலுத்தாது ஏமாற்றியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்கள் கடந்த 12 வருடங்களாக நாட்டிற்கு வழங்க வேண்டிய 53 பில்லியன் டொலர்களை செலுத்தாது ஏமாற்றி … Read more

இலங்கை வந்துள்ள ஆசிய நிர்வாகி அஞ்சலி கௌர்

 யுஎஸ்எய்ட் (USAID)நிறுவனத்தின் ஆசியாவுக்கான பணியகத்தின் பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் இலங்கை வந்துள்ளார். இவர் நேற்று (05.12.2022) வந்தடைந்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் மதிப்பீடு கௌர், இலங்கையின் நெருக்கடி தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன், பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை அறிய அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை சந்திக்கிறார். கடந்த வாரம் யுஎஸ்எய்ட்டின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான … Read more

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானம்  

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானம்  • 8ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கு  • புதிய வருடத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 17ஆம் திகதி  எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (05) நடைபெற்ற பாராளுமன்ற … Read more

உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு

இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான மொத்த உரத்தொகையும் (MOP – Muriate of Potash) கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. பசளையை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இதற்கு முன்னர் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து பசளையை தரையிறக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. அமெரிக்கா, இலங்கைக்கு ஒன்பதாயிரத்து 300 மெற்றிக் தொன் பசளையை வழங்கியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் … Read more