வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2023 ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (08) பாராளுமன்றத்தில், 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் ,எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் கடந்த மாதம் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்தன. எதிராக 84 வாக்குகள் மாத்திரமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது..

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே தெரிவு  

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே அண்மையில் (03) தெரிவுசெய்யப்பட்டார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரன முன்மொழிந்ததுடன், அதனைப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வீரசுமன வீரசிங்ஹ மற்றும் கௌரவ எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் வழிமொழிந்தனர். அத்துடன், பிரதித் தலைவர்களாக கௌரவ மஞ்சுளா திசாநாயக்கவும், கௌரவ … Read more

சீரற்ற காலநிலை: நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் .அவதானத்துடன் செயல்படுமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மலையகத்தின் பல பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசியதினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனைத்தொடந்தே இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் இவ்வாறு அறிவித்துள்ளார் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, … Read more

தேவையான நிதி உதவியை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இணக்கம்

எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் விசேட அறிவுறுத்தல்

தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள “Mandous” புயல் சூறாவளியாக  தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பலத்த மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக மாசடைந்த காற்று துகள்கள் வளிமண்டலத்தில் கலப்பதனால் வளிமண்டலம் மேகமூட்டமாக காணப்படும்.  இதனால் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும். வெளியில் நடமாடுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (08) காலை முதல் … Read more

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு இந்த வருடம் 2300 முறைப்பாடுகள்

2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சுமார் 2300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வழக்கமாக நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவற்றில் இலஞ்ச ஊழல் விசாரணைச் சட்டம் தொடர்பான முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. மேலும், ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற தெளிவற்ற முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணைக்கு எடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் தொடர்பாக மற்றும் அரசாங்க அதிகாரி ஒருவரை பணயக் கைதியாக பிடித்து இலஞ்சம் வாங்கத் தயாராக … Read more

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் பெயர் குறித்த நியமனம் கோருவதற்கான அறிவித்தல்

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் பெயர் குறித்த நியமனம் கோருவதற்கான அறிவித்தல் 2022 ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் திணக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கண்டி நகரத்தில் வளிமாசடைவு – முகக்கவசம் அணிவது நோய்களைத் தடுக்கும்

மத்திய மாகாணம் அடங்கலாக நாட்டின் பல பாகங்களில் நிலவும் குளிரான காலநிலைக்குக் காரணம், வளிமண்டலத்தில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (8)  கண்டியில் வளிமண்டல வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் என்ற அளவிற்கு குறைந்திருந்தது. இன்று மாலைக்குப் பின்னர், நிலைமை சீரடைந்து விடலாம் என கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவிற்குப் பொறுப்பான பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். இன்று பகல் எமது நிலையத்திற்குக் கருத்து வெளியிட்டபோது, … Read more

வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்றத்தினால் டிசம்பர் 06 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார். இதற்கமைய, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ காமினி லொக்குகே, கௌரவ சம்பத் அதுகோரல,      கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு, கௌரவ (திருமதி) … Read more

“Mandous” புயல் 3 மணி நேரத்தில், மணிக்கு 08 கி.மீ வேகத்தில் நகர்வு – கடல் கொந்தளிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மாண்டஸ்” “Mandous” புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 08 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.தாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இன்று டிசம்பர் 08, 2022 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அட்சரேகைக்கு அருகில் புயல் அமைந்தது. 9.3°N மற்றும் தீர்க்கரேகை 84.4°E, காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 560km மற்றும் தமிழகத்தின் சென்னைக்கு தென்கிழக்கே 620 km தொலைவில் புயல் காணப்படுகிறது இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் … Read more