டீசலின் விலை 10 ரூபாவால் குறைப்பு – கேஸ் சிலிண்டரின் விலை மறுசீரமைப்பு

டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை ,சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, லிற்றோ கேஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கேஸின் விலை அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிற்றோ … Read more

புனித சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பம்

நாளை இடம்பெறும்உத்துவப் முழுநோன்மதி தினத்திற்கு அமைவாக பௌத்த சம்பிரதாயங்களுக்கு அமைவான யாத்திரை சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கமைவாக பெல்மடுல, கல்பொத்தாவல, சிறிபாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள புனிதப்பொருள், சமன்தேவ உருவச்சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் நான்கு பாதைகள் ஊடாக சிவனொளிபாத மலைக்கு இன்று எடுத்துச் செல்லப்படும். குருவிற்ற எரந்த பாதை, இரத்தினபுரி பலாபத்தல பாதை, பலாங்கொட பாதை, ஹட்டன் நல்லதண்ணி பாதை ஆகிய வழிகள் ஊடாக இவை எடுத்துச் செல்லப்படும். இன்று மாலை சிவனொளிபாத மலை வரை எடுத்துச் … Read more

கொழும்பில் மனித உடற்பாக கடத்தலில் ஈடுபடும் நபர் கைது

கொழும்பு ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மனித உறுப்புகள் சத்திரசிகிச்சை மூலம் கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ், காஜிமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகம் மாற்று மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் … Read more

கிழக்கு மாகாணத்தில் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வட அந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளது. அது ஒருகுறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையும் ,  நாளை மறுதினம் (08 ஆம் திகதி) மழை நிலைமையும் காற்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் … Read more

இலங்கையில் நாளாந்தம் 6 மணித்தியால மின் தடை அமுலாகும் சாத்தியம்

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை தொடர்பில் நேற்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நஷ்டத்தைக் குறைக்க மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் … Read more

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! தென்கொரிய எல்லையில் 130 முறை பீரங்கி குண்டு தாக்குதல்

வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில் தென்கொரிய எல்லை அருகே 130 முறை வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய … Read more

ரஷ்யர்களின் செயலால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ரஷ்யாவின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின இந்த தாக்குதலால் சபோரிஜியாவிலுள்ள வீடுகள் சேதமாகியுள்ளடதுடன் மின்சாரத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதலின் விளைவுகள் இந்த டெலிகிராம் ஏவுகணைகள் சபோரிஜியாவிலுள்ள கட்டிடங்களில் விழுந்து நொறுங்கியதாக ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் சிறு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்ததுள்ளனர். ரஷ்யர்கள் நாகரீகம் மற்றும் மனித விழுமியங்களுடன் எந்த தொடர்பும் … Read more

ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி:இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 361.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 394.72 ரூபாவாகவும், கொள்வனவு … Read more

குமார வெல்கம திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய குமார வெல்கம எம்.பி திடீர் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சிங்கப்பூருக்கான தனிப்பட்ட விஜயமொன்றை முடித்துக்கொண்டு இன்று முற்பகல் நாடு திரும்பியிருந்தார். விமான நிலையத்தில் அவசர முதலுதவி இந்நிலையில் விமான நிலையத்தில் வைத்து அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவருக்கு விமான நிலையத்தின் அவசர முதலுதவிச் சிகிச்சை மையத்தில் ஆரம்ப கட்ட சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் … Read more