எரிபொருள் வரிசையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹொரண, அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறை

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக ,ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களை வெளிநாடுகளில் பணியமர்த்துவதற்காக வடிவமைக்கப்படதல்ல. அரச உத்தியோகத்தர் வெளிநாட்டில் பணிபுரிய விரும்பினால், அவரே வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவைக் காலம் … Read more

இலங்கையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட 80 வீதமானவர்கள் இன்னும் வெளிநாடு செல்லவில்லை என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.  நான்கு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார் நான்கு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 70,000 பேர் மட்டுமே வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 2400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! வெளியாகியுள்ள அறிவிப்பு  ஒருநாள் சேவையில் 1000 கடவுச்சீட்டுக்கள் ஒருநாள் சேவையில் 1000 கடவுச்சீட்டுக்களும், … Read more

எதிர்வரும் 29 ஆம் திகதி ,அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் தொழில் சந்தை

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் உருவாகியுள்ள வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் ,ஜூன் மாதம் 29 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தொழில் சந்தை நடைபெறவுள்ளது. பதவி வெற்றிடங்கள் உள்ள பல உள்ளூர் தனியார் நிறுவனங்கள் இந்த தொழில் சந்தையில் பங்கேற்கவுள்ளன. அன்றைய தினம் சமூகமளிக்கும் பயனாளர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாகவும் அமையக்கூடும். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் … Read more

தென்மேற்கு பிரதேசங்களில் மழையுடனான கால நிலையில் அதிகரிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்24ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more

பெட்ரோல் 500 ரூபா: டீசல் 450 ரூபா! இலங்கையில் இன்று எகிறப்போகும் விலைகள் – வெளியானது முக்கிய தகவல்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய பெட்ரோல், டீசல் விலைகளை இன்று அதிகரிப்பதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதேவேளை மண்ணெண்ணெய் விலையை பெருமளவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை அதிகரிப்புகளுக்கு அமைய பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 500 ரூபாவை நெருங்கவுள்ளதுடன், டீசல் லீட்டர் ஒன்றின் விலை 450 ரூபாவை தாண்டவுள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,  Source link

இலங்கைக்கு 800 மில்லியன் டொலர் வழங்கிய ரஷ்யா – பயன்படுத்தாமல் விட்ட அரசாங்கம்

ரஷ்யாவிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் இதுவரை இலங்கை பயன்படுத்தப்படவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை – ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் இலங்கை – ரஷ்ய நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடைபெற்றது. நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 800 மில்லியன் டொலர் வழங்கிய ரஷ்யா “ரஷ்யாவிடம் இருந்து மிகப் … Read more

இலங்கையின் பணவீக்கத்தை 130.14 சதவீதமாக அளவிட்டுள்ள ஸ்டீவ் ஹான்கே!

தனது துல்லியமான அளவீட்டின்படி, இலங்கையின் பணவீக்கம் 130.14 சதவீதமாக உள்ளது என்று பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பணவீக்கம் அதிகாரப்பூர்வமான 39.10 சதவீதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் என்ற தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஹான்கே, நாணய பிரச்சனை உள்ள நாடுகளில் பணவீக்கத்தை அளவிடுகிறார். ஒரு … Read more

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பின்னரே தேர்தல் – பிரதமர் தெரிவிப்பு

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று விசேட அறிக்கையை வெளிட்டு பிரதமர்  இதனை தெரிவித்தார் மேலும் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட … Read more