யூடியூப் வீடியோவை 'லைக்' செய்தால் பணம்: வெளிச்சத்துக்கு வந்த புதிய ரக இணையவழி மோசடி

சென்னை: சைபர் க்ரைம் மோசடிகளின் வரிசையில் புதிதாக யூடியூப் வீடியோவை `லைக்’ செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, கவனமாக இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் ஸ்மார்ட்போன் பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. போன்பயன்படுத்தாதோரின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. சூப்பர் மார்க்கெட் முதல் கடைக்கோடி பெட்டிக்கடை வரையிலும் க்யூஆர் குறியீட்டை … Read more

சாம்சங் வழங்கும் Frevolution 5G பற்றிய முன்னோட்டம்! உங்களின் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்தும் 5 அம்சங்களுடன் வரவிருக்கும் Galaxy F14 5G!

எந்த ஒரு இளைஞரின் வாழ்விலும் அவரின் முதல் ஸ்மார்ட்போன் என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கும். ஸ்மார்ட்போன் என்பது கனக்டிவிட்டி, சோஷியல் மீடியா, கேமிங் என ஒரு அற்புதமான புது உலகை திறக்கும் கருவி. மேலும் அவர்களின் படைப்பு திறனை அவர்களே அறிவதற்கு அது உதவுகிறது. இது GenZயின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அனைத்துவிதமான அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையிலான முதல் ஸ்மார்ட்போன் ‘Frevolution’ ஆக தான் இருக்க கூடும்! இளைஞர்களின் இந்த தேவைகளையும் மனதில் … Read more

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் 'ப்ளூ டிக்' கட்டண சந்தாவை தொடங்கிய மெட்டா

சான் பிரான்சிஸ்கோ: தங்களது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ‘ப்ளூ டிக்’ பெற விரும்பும் பயனர்கள் சந்தா செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளும் புதிய முறையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு இது அமெரிக்க நாட்டில் மட்டுமே நடைமுறைக்கு வந்ததாக தெரிகிறது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பயனர்களுக்கு ‘ப்ளூ டிக்’ கட்டண சந்தாவை மெட்டா நிறுவனமும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் … Read more

Apple iPhone 14 மாடல் இப்போது ஐபோன் 13 விட 10,000 ஆயிரம் மட்டுமே அதிகம்!

உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 தற்போது 72,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. மேலும் HDFC வங்கி பயனர்கள் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் இந்த போன் 68,999 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். அதாவது தற்போது விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13 மாடலை விட 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 விலை குறைவாக கிடைத்தாலும் ஐபோன் 14 வெறும் 8 ஆயிரம் ரூபாய் … Read more

iQoo Z7 5G ஸ்மார்ட்போன் விலை அறிவிப்பு! மார்ச் 21 வெளியாகும்

iQoo நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போனாக வரப்போகும் Z7 5G ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கென தனியாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விலை 17,499 ரூபாய் என்று அறிவித்துள்ள iQoo நிறுவனம் அந்த போனை மார்ச் 21 அன்று வெளியிடுகிறது. iQoo Z7 5G இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிலே வசதி 90HZ Refresh Rate வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செக்மென்ட்டிலேயே சிறந்த 1300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. இதனால் இதன் … Read more

Airtel 5G: புதிய Unlimited Data வசதியை அறிமுகம் செய்த ஏர்டெல்! எப்படி பெறுவது?

இந்தியாவில் முன்னனி டெலிகாம் சேவை நிறுவனமான Airtel அதன் PostPaid பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் 5G சேவையின் உண்மையான திறனை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்த இந்த புதிய திட்டத்தை ஏர்டெல் செயல்படுத்தியுள்ளது. இதனால் இனி Airtel 5G Plus மூலமாக அன்லிமிடெட் 5G டேட்டா பயன்படுத்தலாம். தற்போது ஏர்டெல் 5G இந்தியாவில் 270 நகரங்களில் கிடைக்கிறது. இதே நேரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை 365 நகரங்களில் அறிமுகம் … Read more

சாட் – ஜிபிடிக்கு போட்டியாக சீனா புதிய மென்பொருள் அறிமுகம்

பெய்ஜிங்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓப்பன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் ‘சாட்ஜிபிடி’ மென்பொருளை அறிமுகம் செய்தது. இணையப் பயன்பாட்டில் சாட்ஜிபிடி பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது. தொழில், மருத்துவம், கல்வி, நிதி சேவை, தொலைத் தொடர்பு, மென்பொருள், நீதி, போக்குவரத்து, தயாரிப்புத் துறை, சுற்றுலா, பொழுதுபோக்கு, விளம்பரம், நுகர்வோர் சேவை உள்ளிட்டவை சாட்ஜிபிடியால் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடியை எதிர்கொள்ளும் வகையில் புதிய தயாரிப்புகளை உருவாக்க … Read more

10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம்: இணையவழியில் 3 மாதங்களுக்கு இலவசம்!

சென்னை: 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் … Read more

Amazfit ஸ்மார்ட்வாட்ச் நிறுவனத்தின் புதிய GTR Mini வெளியாகியது! 20 நாட்கள் வரை நீடிக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

கடந்த செப்டம்பர் 2022 மாதம் Amazfit வெளியிட GTR Mini ஸ்மார்ட்வாட்ச்சின் மேம்படுத்தப்பட்ட மாடலை தற்போது இந்தியா, UK, USA, ஐரோப்பிய நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நமக்கு ஒரு 1.28 இன்ச் ரவுண்டு டிஸ்பிலே வசதி, GPS போன்றவை உள்ளன. விலை விவரம் இதன் விலை 10,999 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது. இதன் விற்பனை எப்போது தொடங்கும் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இது Amazon மூலமாக விற்பனை செய்யப்படும் … Read more

சாம்சங் கேலக்சி ஏ34, ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: சாம்சங் கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஐந்து ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் நான்கு இயங்குதள அப்டேட் இதில் கிடைக்கும் எனத் தகவல். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது … Read more