ஜெயராம் – மீரா ஜாஸ்மின் படத்திற்கு டைட்டில் கிடைத்த சுவாரஸ்யம்

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு. குடும்பப்பாங்கான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர். தற்போது ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் கதாநாயகியாக மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ள மீரா ஜாஸ்மின், இதில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு மகள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்கு ஏற்ற டைட்டில் தான் இது என்றாலும் இயக்குனர் சத்யன் அந்திக்காடுக்கு இந்த டைட்டில் பளிச்சிட்டது ஷூட்டிங் ஸ்பாட்டில் தான். … Read more

Dhanush: அடடா… இதுவல்லவோ பாசம்… அண்ணனை கட்டியணைத்தப்படி தனுஷ்… லேட்டஸ்ட் பிக்!

கடந்த 2 மாதங்களாக நடிகர் தனுஷ் குறித்து ஏதாவது ஒரு செய்தி வெளியான வண்ணம் உள்ளது. ஒன்று அவரது சினிமா வாழ்க்கை அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாள்தோறும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் தனுஷ். அதன்பிறகு தனது வேலையில் படு பிஸியாக இருந்து வருகிறார். இதேபோல் ஐஸ்வர்யாவும் தனது வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் … Read more

`யாரிந்த சாந்தனு ஹஸரிகா?' தன் காதலன் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன ஆச்சர்யத் தகவல்!

ஸ்ருதிஹாசன் தற்போது பல முன்னணி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அதற்கு நடுவில் அவருக்கு பர்சனலாக பிடித்த இசை, புத்தகங்கள் இவற்றுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் தவறுவதில்லை. தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருக்கும் ஸ்ருதி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். ஸ்ருதியின் இன்ஸ்டா ஸ்டோரி இப்போது வைரலாகி வரக் காரணம், அவரது நண்பரும் காதலருமான சாந்தனு ஹஸரிகா உடனான புகைப்படமே. இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தவாறு எடுக்கப்பட்டிருக்கும் செல்பியை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் ரியாக்ட் … Read more

ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் ‘எஃப்ஐஆர்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷ்ணு விஷாலின் ‘எஃப்ஐஆர்’ ஓடிடியில் நாளை வெளியாகிறது. விஷ்ணு விஷால்-மஞ்சிமா மோகன் நடிப்பில் ’எஃப்.ஐ.ஆர்’ கடந்த மாதம் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மனு ஆனந்த் இயக்கிய இப்படத்தில் கெளதம் மேனன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அஷ்வத் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இப்படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இப்படத்தின், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி … Read more

ஜீவா – ஜெய் படத்தில் ரெடின் கிங்ஸ்லீக்கு முக்கியத்துவம் அளிக்கும் சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சி சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், தற்போதும் அவரது படங்களுக்கு என தனி ரசிகர் வட்டமும், வரவேற்பும் இருக்கிறது. காலங்கள் மாற மாற அதற்கேற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவையில் புதுப்புது பணிகளை கையாளுவது சுந்தர்.சியின் உத்திகளில் ஒன்று. அதேபோல சுந்தர்.சியின் படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.. அந்தந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து அவரது படங்களில் இடம் பெறுவார்கள் அந்த வகையில் … Read more

ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

ஓடிடியில் வெளியாகியுள்ளது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’. ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கியிருப்பதோடு ஒளிப்பதிவு செய்தும் தயாரித்தும் இருக்கிறார். விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. சந்தோஷ் நாராயணனும் ரிச்சர்ட் ஹார்வியும் இசையமைத்துள்ளார்கள். ’நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவின் தரமான படைப்பு’ என்று ‘கடைசி … Read more

ப்ரியங்கா உள்ளே மா.கா.பா வெளியே : என்ன நடந்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மா கா பா மற்றும் ப்ரியங்கா ஜோடி இணைந்து சுவாரசியமாக தொகுத்து வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்ட போது ப்ரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக மைனா நந்தினி மா கா பா உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் வந்த ப்ரியங்கா நிகழ்ச்சியில் ஆங்கராக எண்ட்ரி கொடுத்ததால் நந்தினி வெளியேறினார். ஆனால் … Read more

புது புது சிக்கல்களில் சிக்கிகொள்ளும் சமந்தா…!தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புது சர்ச்சை…!

சரக்கு விளம்பரத்திற்காக படுகவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா . இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் சமந்தா.தென்னிந்தியாவில் டாப் நடிகையாக இருந்து வரும் சமந்தாவிற்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புக்கள் வர துவங்கி உள்ளன. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிக்கும் படங்களை விட, கணவர் நாக சைதன்யாவுடனான விவாகரத்தை அறிவித்த பிறகு, சமந்தா என்ன … Read more

ஓடிடியில் இன்று மாலை வெளியாகும் தனுஷின் ‘மாறன்’

நடிகர் தனுஷின் ‘மாறன்’ இன்று மாலை ஓடிடியில் வெளியாகிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தில், முதல் முறையாக ஊடகத்துறையைச் சேர்ந்தவராக நடித்திருக்கிறார் தனுஷ். சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு விவேகானந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மாறன்’ மார்ச் 11 இன்று வெளியாகிறது என்று படக்குழு அறிவித்ததால் … Read more

மம்முட்டி பட இயக்குனருடன் இணையும் சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம், இதுதவிர சிறுத்தை சிவாவுடன் என அடுத்தடுத்து தனது பட வரிசையை தயார் நிலையில் வைத்துள்ளார்.. அதேசமயம் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சூர்யா, அங்கே தன்னுடைய புதிய பட அறிவிப்பு குறித்து ஒரு தகவலை வெளிப்படையாகவே கூறினார். அதாவது மம்முட்டியை வைத்து பல வருடங்களுக்கு … Read more