வன்முறை சம்பவம் எதிரொலி: சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு..!

அமராவதி, ஆந்திர மாநிலம் புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவம் எதிரொலியாக முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சந்திரபாபு நாயுடு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி, கலவரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோதல் தொடர்பாக சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்காக … Read more

Mercedes Benz GLC – மெர்சிடிஸ்-பென்ஸ் GLC எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ஆடம்பர எஸ்யூவி மாடல்களில் சிறப்பான வசதிகள் பெற்ற 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் GLC எஸ்யூவி ரூ.73.5 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டதாக வந்துள்ளது. GLC300 4Matic மற்றும் GLC 220d 4Matic என இருவிதமான என்ஜின் ஆப்ஷன் கொண்டுள்ள ஆடம்பர எஸ்யூவி காரில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக உள்ளது. இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. Mercedes-Benz GLC 19 அங்குல அலாய் வீல் பெற்ற … Read more

`ஆசிரியை மீது கல் வீசியது யார்?'; அரசுப்பள்ளிக்குள் சென்று மாணவர்களை தாக்கியதாக போலீஸ் மீது புகார்!

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தஞ்சாவூர், வல்லம் அருகே உள்ள அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் … Read more

ஆகஸ்ட் 9: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 76 ரூபாய் 70 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Drugs worth over Rs 1,610 crore seized by Assam Rifles in Manipur since July 2022 | மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டில் மட்டும் ரூ.1,610 கோடி போதை பொருள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், 2022 ஜூலை முதல் கடந்த ஜூலை வரையிலான காலத்தில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்து உள்ளனர். வட கிழக்கு மாநில மான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022 ஜூலை – கடந்த ஜூலை வரையிலான ஓராண்டில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் … Read more

“கொத்தடிமைக் கூட்டமான திமுக, அதிமுக-வை விமர்சிப்பது வெட்கக்கேடானது!” – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

டெல்லி மசோதா (Delhi Service Bill) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதனால் டெல்லி அரசின் அதிகாரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! ஸ்டாலின் எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜக-வின் … Read more

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்”  என அவைத் தலைவர் ஜகதீப் தங்கர் வேதனை தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அவைகளை முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், மக்களவையில், மத்திய பாஜக அரசுமீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்டு 8ந்தேதி) தொடங்கி … Read more

ட்விஸ்ட்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று ராஜினாமா? கலைக்கப்படும் நாடாளுமன்றம்! பரபர பின்னணி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை 3 நாள் முன்கூட்டியே கலைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அதிபர் ஆரிப் ஆல்விக்கு இன்று கடிதம் எழுதுவதோடு, அவர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதும், அதன் பின்னணியில் உள்ள மாஸ்டர் பிளானும் வெளியாகி உள்ளது. Source Link

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜி… விசாரணைக் காட்சிகளும் அதன் அடுத்தக்கட்டமும்!

ஜூன் மாதம் 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் சீரானதும் புழல் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறையில் இருந்த அவரை தற்போது சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டிருப்பதே தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். செந்தில் பாலாஜி விசாரிக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கடும் சட்ட போராட்டங்களை நடத்தி, ஒருவழியாக அமைச்சரை 5 நாள் … Read more

பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் .

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் …. சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்வது.. ‘’பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியிருந்தாலும் என்னை வெற்றிகரமான கதாநாயகனாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்தான்’’. காதலியை விபத்தில் பறிகொடுத்து குடிகாரனாகி காமூகனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்து அன்புக்கு ஏங்கும் பாத்திரம். தொடர்ந்து வில்லத் தனம் காட்டிவந்த ரஜினி, புவனா ஒரு கேள்விக்குறி(1977)யில் பின்னியிருப்பார். எவ்வளவு பாசம் காட்டியும் தூரவே தள்ளிவைக்கும் பெண்ணால், நொந்து … Read more