17-year-old girl rape, B.J. warrant for secretary | 17 வயது சிறுமி பலாத்காரம் பா.ஜ., செயலருக்கு பிடிவாரன்ட்

மீரட்:உத்தரப் பிரதேச மாநிலத்தில், 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மீரட் மாநகர பா.ஜ., பொதுச் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தவுராலா நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா கூறியதாவது: மீரட் நகரில் உள்ள வழக்கறிஞர் ரமேஷ் சந்த் குப்தா அலுவலகத்தில் 17 வயது சிறுமி பணிபுரிந்தார். வக்கீல் குப்தா, அவரது உறவினரும், மீரட் மாநகர பா.ஜ., பொதுச் செயலருமான அரவிந்த் குப்தா மார்வாரி மற்றும் கூட்டுறவு சங்க … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை… அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்…

செஞ்சி-யில் இருந்து மாந்தாங்கல் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று துவங்கி வைத்தார். செஞ்சியில் இருந்து களவாய் கூட் ரோடு, நெகனூர், தொண்டூர், வெடால், தாமனூர் வழியாக மாந்தாங்கல் செல்லும் இந்த பேருந்து வசதி இதுவரை பேருந்து வசதியே இல்லாமல் இருந்த அந்த கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி பணிமனையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்த பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் இந்தப் பேருந்தில் ஏறி பயணம் … Read more

40,000 page mega reply to RTI questioner | ஆர்.டி.ஐ.,யில் தகவல் கேட்டவருக்கு 40,000 பக்கங்களில் வந்த மெகா பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்துார்,: மத்திய பிரதேசத்தில் கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டவருக்கு, 40,000 பக்கங்களில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் இந்துாரைச் சேர்ந்த தர்மேந்திர சுக்லா என்பவர், இந்துார் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியிடம், ஆர்.டி.ஐ., வாயிலாக கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதில், கொரோனா காலத்தில், மருந்துகள், உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை வாங்கியது, அது குறித்த டெண்டர்கள், … Read more

2023 Yamaha R3 and MT-03 – இந்தியா வரவிருக்கும் யமஹா ஆர்3, எம்டி-03 பைக் அறிமுகம்

2023 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்பட உள்ள யமஹா R3 மற்றும் MT03 பைக்குகள் இன்றைக்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற டிராக் தின கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. குறிப்பாக இரண்டு பெர்ஃபாமென்ஸ் ரக பைக்குகளும் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இரண்டிலும் 321cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். Yamaha YZF-R3 R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் அதிகபட்ச பவர் 40.4 … Read more

கலாம் புத்தகத்தை வெளியிட்ட அமித் ஷா | திமுக இளைஞரணி அறிமுக கூட்டத்தில் ஸ்டாலின் – News In Photos

சென்னை: திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு இராமேஸ்வரம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலாமின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகத்தை வெளியிட்டார். புதுச்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பேசிய ஐ.லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி-யிடம் அதிமுகவினர் புகாரளித்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள 15 … Read more

பிரிட்டனின் சிறந்த உடை அணிபவராக பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தேர்வு

பிரிட்டன்: பிரிட்டன் நாட்டிலேயே சிறப்பாக ஆடை அணியும் பெண், அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி என்று தி டாட்லர் இதழ் அறிவித்துள்ளது. பாரம்பரியத்தை மீறாமல், 43 வயதில் கண்ணியத்தை காக்கும் வகையில் அக்ஷதா மூர்த்தி ஆடைகளை தேர்வு செய்வதாக தி டாட்லர் இதழ் பாராட்டியுள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா, ஜி 7 மாநாட்டில் ரிஷி சுனக் உடன் பங்கேற்றபோது, அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடைகளை தி டாட்லர் குறிப்பிட்டுள்ளது. இன்போசிஸ் … Read more

ஆக.10ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சில போட்டிகள் மாற்றியமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்? 34 ஆண்டுகளுக்கு பிறகு.. பாரம்பரிய வழித்தடத்தில் மொகரம் ஊர்வலம்

India oi-Halley Karthik ஸ்ரீநகர்: உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று மொகரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஷ்மீரில் 34 ஆண்டுகளுக்கு பின்னர் மொகரம் ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொகரமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சர்ச்சரவு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேவேளையில் தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து போரிடலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் … Read more

2.5 crore loot from 326 people claiming to give profit in one day | ஒரே நாளில் லாபம் தருவதாக கூறி 326 பேரிடம் ரூ.2.5 கோடி அபேஸ்

புதுச்சேரி: ஐரோப்பிய ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, ஒரே நாளில் லாபம் தருவதாக கூறி, புதுச்சேரியில் 326 பேரிடம் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, வில்லியனுார் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது, அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் ‘டோல்’ என்ற ஐரோப்பிய ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி என அறிமுகபடுத்திக் கொண்டார்.அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு … Read more