"நாங்கள் பிபிசி உடன் நிற்கிறோம்!" – வருமான வரித்துறை சோதனை குறித்து இங்கிலாந்து அரசு

டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பிபிசி ஊடக நிறுவன அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் கடந்த வாரம் மூன்று நாள்கள் சோதனை நடத்தினர். இதற்கு ஊடக அமைப்புகள் தரப்பிலிருந்தும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இறுதியாக, சோதனையின் முடிவில் அலுவலகங்களில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது. பிபிசி – வருமான வரித்துறை இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு தற்போது, `பிபிசி-க்காக நாங்கள் நிற்கிறோம்’ என இங்கிலாந்து அரசு அதன் நாடாளுமன்றத்தில் … Read more

மூன்று முறை செத்துப்பிழைத்தவரை விடாமல் துரத்தும் ஆவி: இப்படியும் நடக்குமா என்ன?

விபத்து ஒன்றில் சிக்கி மூன்று முறை செத்துப்பிழைத்த தன்னை விடாமல் ஆவி ஒன்று பயங்கரமாக துரத்துவதாக தெரிவித்துள்ளார் அமெரிக்கர் ஒருவர். திகிலடைய வைத்த காட்சி பாழடைந்த கட்டிடங்களைச் சென்று பார்வையிடும் பழக்கம் கொண்ட நிக் சம்மர்ஸ் (Nick Summers, 36) 1940களில் கட்டப்பட்ட பாழடைந்த மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு வாழ்க்கையில் நிக் சந்தித்ததெல்லாமே திகில் சம்பவங்கள்தான்! ஒரு நாள் தன் மனைவி Kinseyயுடன் படுக்கையிலிருக்கும்போது, வீட்டுக்குள் யாரோ நடமாடுவதுபோல் தெரியவே, படுக்கையிலிருந்து எழுந்து சென்று … Read more

இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட 100 கிமீ தூரம் வரை தாக்கி அழிக்கும் அஸ்ட்ரா சாஸ்த்ரா ஏவுகனை சோதனை வெற்றி!

ஒடிசா: இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட, விமானம் மூலம் ஏவப்பட்டு எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்ட்ரா சாஸ்த்ரா ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  அஸ்ட்ரா சாஸ்த்ரா ஏவுகனை, இந்திய போர் விமானம் மூலம் வானிலிருந்து மற்றொரு வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த ஏவுகனை சோதனை  வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் … Read more

விருதுநகரில் ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு

விருதுநகர்: விருதுநகரில் ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து குழந்தையை மீட்ட போலீசார் பாதுகாப்பு மையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். பெற்றோர், செவிலியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலையாள நடிகை சுபி சுரேஷ் காலமானார்| Malayalam actress Subhi Suresh passes away

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி: மலையாள நடிகை சுபி சுரேஷ்,41 காலமானார். இவர் 20க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும், தொலை காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்துள்ளார். மிமிக்ரி செய்வதில் பலரின் பாராட்டை பெற்றுள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி , சின்னத்திரையிலும் பிரபலமடைந்து வந்தார். கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். சுபி சுரேஷ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் … Read more

120 கிமீ ரேஞ்சு.., ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் #Riverindie

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ரிவர் மொபைலிட்டி நிறுவனம் தனது முதல் மாடலை River Indie என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் விற்பனைக்கு ரூ.1.25 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளது. ரிவர் இண்டி ஸ்கூட்டரின் டெலிவரிகள் ஆகஸ்ட் 2023 ல் தொடங்கும் என்பதால் முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளதாகவும், சோதனை முயற்சி தயாரிப்புகள் ஏப்ரல் 2023-ல் தொடங்குகின்றன. முன்பதிவு ஆர்டர்கள் இப்போது துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.1250 வசூலிக்கப்படுகின்றது. River … Read more

அதே கைகள்! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சீனி தன் காதல் மனைவி தீபாவுடன் இப்போது தன் சொந்த ஊருக்கு காரில் துக்கவீட்டிற்கு சென்றுகொண்டிருக்கிறான். துக்கவீடு யாரோ ஒருவரின் வீடல்ல. அது அவன் வீடுதான்! சிமெண்ட் தரையிலும் டைல்ஸ் தரையிலும் உருண்டு பிரண்டு அவன் வாழ்ந்த வீடுதான்! இறந்துகிடப்பவர் அவன் அப்பா … Read more

லட்சங்கள் மதிப்புள்ள ஆடம்பர காலணியை அணிந்து வந்த பிரித்தானிய முதல் பெண்மணி! வைரல் புகைப்படங்கள்

இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய முதல் பெண்மணி, 10 டவுனிங் தெருவில் செல்லும்போது லட்சங்கள் மதிப்புள்ள ஆடம்பர செருப்புகளை அணிந்து காணப்பட்டார். அக்ஷதா மூர்த்தி பிரித்தானியாவின் (UK) முதல் பெண்மணி, இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி (Akshata Murty), பகல்நேர ஆடைகள், கோட்டுகள் மற்றும் மாலை ஆடைகளை அணிவது வரையிலான ஃபேஷனுக்கான நேர்த்தியான அணுகுமுறைக்காக பரவலாக அறியப்படுகிறார். அந்த வரிசையில், அக்ஷதா மூர்த்தி இப்போது JW Anderson மெல்லிய தோல் செருப்புகளை தனது … Read more

டெல்லி மேயர் பதவி: 15ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது ஆம்ஆத்மி கட்சி…

டெல்லி: டெல்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியை ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்றம், நியமன கவுன்சிலருக்கு வாக்குரிமை கிடையாது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், சுமார் 15 வருடத்துக்கு பிறகு பாஜகவிடம் இருந்து ஆம்ஆத்மி கட்சி மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது. அதன்படி டெல்லி  எம்சிடி (Municipal Corporation of Delhi (MCD) மேயராக  ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய்,  துணை மேயராக அலே எம்டி இக்பால்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். டெல்லியில்  கடந்த 2022ம் ஆண்டு … Read more

நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள சிதம்பரத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சிதம்பரம்: சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்க உள்ள தமிழக கவர்னர் ரவியை துணைவேந்தர் கதிரேசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் இருந்தார்.