மாதவிடாய் நாட்களில் விடுமுறை: முதல்முறையாக சட்டமியற்றும் ஐரோப்பிய நாடு

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்று இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. முதல் ஐரோப்பிய நாடு மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அத்தகைய விடுப்பு வழங்கும் சட்டத்தை முன்வைக்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் எனவும் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 185 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவாகியுள்ளது. மாதவிடாய் கால விடுப்பு என்பது உலகில் மிக சில நாடுகளில் மட்டுமே … Read more

ரூ.6.40 லட்சம் கோடியில் 470 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா!

டெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், ஏர்பஸ் மற்றும் போயிங்கிலிருந்து மொத்தம் 470 அகலமான மற்றும் குறுகிய  விமானங்களை வாங்குவதாகக் அறிவித்து உள்ளது. மேலும் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.40 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் … Read more

தேர்தல் நேரத்தில் அவதூறு, பொய் புகார்களை பரப்புவதே ஓபிஎஸ் தரப்பின் வேலையாக உள்ளது: எடப்பாடி தரப்பு சாடல்

சென்னை: தேர்தல் நேரத்தில் அவதூறு, பொய் புகார்களை பரப்புவதே ஓபிஎஸ் தரப்பின் வேலையாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. பணம் தந்து பதவி வாங்கலாம் என்ற நோக்கம் யாருக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் எடப்பாடி தரப்பு கூறியுள்ளது.

தனியார் விடுதியில் பாலியல் தொழில்; சென்னையில் அடைத்து வைக்கப்பட்ட ஏழு பெண்கள் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை, வடபழனி கனகப்பா தெருவில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் சந்தேகப்படும்படி பலரும் வந்துபோவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலையடுத்து, அந்த விடுதியின் செயல்பாடுகளை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கண்காணிப்பு செய்தனர். மணிகண்டன் தொடர் கண்காணிப்பில் அந்த விடுதியில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. தகவல் உறுதியானதும், பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவலர்கள் அந்த விடுதியில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, … Read more

விமர்சனங்களை எதிர்கொள்ளும் மெஸ்ஸி., கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ!

மெஸ்ஸி ரசிகர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் அதே நேரத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து போட்டிகளைத் தாண்டி வெளியே மில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்துவருகிறார். கால்பந்து உலகின் ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஓய்வு பெறும் வரை எல்லாவற்றிலும் ஒப்பிடப்படுவார்கள் என்பது எழுதப்படாத விதி. அது அவர்கள் ஓய்வுபெற்றாலம் தொடர வாய்ப்புள்ளது. மெஸ்ஸி மீது விமர்சன மழை சமீபத்தில் UEFA சாம்பியன்ஸ் லீக்கில் Bayern Munich-க்கு எதிரான Paris Saint-Germain-ன் ஆட்டத்திற்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி மீது விமர்சன … Read more

மகா சிவராத்திரி: மதுரை மீனாட்சியை தரிசிக்கும் குடியரசு தலைவர் முர்மு இரவு ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்…

சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசு தலைவர் முதன்முறையாக, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, கோவை செல்கிறார். அன்று இரவு கோவை  ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 18ந்தேதி மகா சிவராத்திரியன்று  காலை … Read more

நீலகிரி மாவட்டத்தில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கவில்லை எனக்கூறி ரூ.500 அபராதம் வசூலித்த வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூன் 10ல் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் சேகர், கோவையில் இருந்து அரசு பேருந்தில் உதகை சென்றுள்ளார். டிக்கெட் பரிசோதகரின் சோதனையில் சேகர் தனது டிக்கெட்டை பையில் தேடி எடுக்க தாமதம் ஆகியுள்ளது.

பஞ்சாப்பில் லஞ்ச புகாரில் எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் கைது| MLAs assistant arrested for taking bribe in Punjab

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம், பதிந்தா ஊரக சட்டசபை தொகுதி, ஆம் ஆத்மி கட்சியின், எம்.எல்.ஏ., அமித் ரத்தன் கோட்பட்டாவின், நேர்முக உதவியாளர், 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, பதிந்தா விருந்தினர் மாளிகையில் வைத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ளார். அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம், பதிந்தா ஊரக சட்டசபை தொகுதி, ஆம் ஆத்மி கட்சியின், எம்.எல்.ஏ., அமித் ரத்தன் கோட்பட்டாவின், நேர்முக உதவியாளர், 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, பதிந்தா புதிய … Read more

பிரத்யேக ஆப்; வாடகை வீட்டில் பாலியல் தொழில்! – கும்பகோணத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

கோயில் நகரமான கும்பகோணத்தில் மசாஜ் சென்டர், தங்கும் விடுதிகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் பாலியல் தொழில் படுஜோராக நடப்பதாக போலீஸாருக்கு புகார் வந்து கொண்டேயிருந்தது. இதனால் பொதுமக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இரண்டு மசாஜ் சென்டர்களில் சோதனை செய்த போலீஸ், அவற்றில் பாலியல் தொழில் நடப்பதை கண்டுபிடித்ததுடன், இரண்டு பெண்கள் மற்றும் புரோக்கராகச் செயல்பட்ட மணிகண்டன் என்ற இளைஞரையும் கைதுசெய்தனர். பறிமுதல் செய்யபட்ட டூவீலர் இதையடுத்து மாவட்டக் … Read more

ஐயா வைகுண்டர் அவதார திருநாள்: நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..

நெல்லை: அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அய்யா வைகுண்டசாமி அவதார திருநாள், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். இதையொட்டி, நெல்லை மாவட்டத்துக்கு மட்டும், மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில், அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு … Read more