கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை

வாஷிங்டன் : உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில் பிடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு; முதல்-மந்திரி அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.  ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் … Read more

அதானியின் தொடர் முதலீடு.. அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் அதானி எண்டர்பிரைசஸ்..!

அதானி குழுமம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு துறையிலும் தனது காலடியினை ஆழமாக பதித்து வருகின்றது. அதோடு ஆய்வு செய்து முதலீடுகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் Unyde Systems நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்கியுள்ளது. இந்த கையகப்படுத்தலின் மதிப்பு 3.75 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. 2வது நாளாக அதானி கொடுத்த வாய்ப்பு.. முதலீட்டாளர்களுக்கு இது பொற்காலம் தான்..! … Read more

விரைவில்.., ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 விற்பனைக்கு அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலான ஹிமாலயன் பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்கிராம் 411 மாடலை பொருத்தவரை விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஹிமாலயன் மாடலை விட ரூபாய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை குறைவாக எதிர்பார்க்கப்படுகின்றது மிகவும் நேர்த்தியான ஆன்ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ராயல் என்ஃபீல்டு Scram 411 தோற்ற அமைப்பினை பொறுத்தவரை ஹிமாலயனில் இருந்து பல்வேறு மாறுபாடுகள் … Read more

`தங்கையை கார் மோதி கொல்ல முயன்ற அண்ணன்!’ – 7ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே சொக்க நாதப்பட்டியைச் சேர்ந்தவர் முரளி(36). இவரின் சித்தியின் மகளான திவ்யா என்பவர், நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த 2017 ஜூலை மாதம் திவ்யா தனது கணவருடன் டூவிலரில் சொக்க நாதப்பட்டி அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, முரளி, அவரின் தந்தை பெருமாள் ஆகியோர் தங்களது காரை டூவிலரில் மோதி காதல் திருமண தம்பதியைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக, வழக்கு பதிவு … Read more

கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ., முதல் நாளே வேலைக்கு உலை வைத்துக்கொண்ட ரஷ்ய அதிகாரி!

ரஷ்யாவில் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள ஓவியத்தில் விளையாட்டுத்தனமாக கண்களை வரைந்துவைத்த பாதுகாவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் முதல் நாளிலேயே அவர் இப்படி செய்து, அவரது வேலைக்கு அவரே உலை வைத்துகொண்டுளோர். ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரத்தில் உள்ள Boris Yeltsin Presidential Center-ல் சோவியத் யூனியன் காலத்தில் வரையப்பட்ட ‘Three Figures’ (மூன்று உருவங்கள்) என்ற ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது. Anna Leporskaya எனும் புகழ்பெற்ற ரஷ்ய கலைஞரால் … Read more

உ.பி. சட்டமன்ற முதல்கட்ட தேர்தல்: மாலை 3 மணி வரை 50%க்கும் குறைவான வாக்குப்பதிவு…

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பபதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு முற்பகல் முதல் குறைவாகவே பதிவாகி வருகிறது.  மாலை 3 மணி வரை 50%க்கும் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது. 403 தொகுதிகளை கொண்ட  உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. … Read more

ஒவ்வொரு சான்றுக்கும் லஞ்சம்?: அவினாசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

திருப்பூர் : அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ் தொடர்பாக பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் அறிவிப்பு பேனர் ஒன்றை யாரோ வைத்துள்ளனர். அதுவும் முக்கிய அறிவிப்பு என்று அந்த பேனரின் தலைப்பில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு, அதற்கு கீழ் மணியக்கார அம்மாவிடம்சென்று யாரும் வாக்குவாதம் செய்ய … Read more

பிப்-11: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.