ஓட்டுநர்களுக்கு நற்செய்தி… இனி சுங்கச்சாவடிகளில் நிற்கவே வேண்டாம் – 6 மாதத்தில் வரும் புது திட்டம்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கட்கரி, தற்போது நெடுஞ்சாலைகளில் செயல்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகள் நீக்கம் குறித்து மீண்டும் ஒருமுறை அவர் பேசியுள்ளார். அதில்,”நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். நாட்டில் … Read more

ரயில்வே பணிநியமன ஊழல் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன்

பீகார்: ரயில்வே பணிநியமன ஊழல்தொடர்பாக இன்றுவிசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ராகுல் பாணியில் ‘மோடி’ குறித்து 2018-ல் ட்வீட் செய்த குஷ்பு தன்னிலை விளக்கம்

சென்னை: கடந்த 2019-ல் மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், பாஜகவில் அங்கம் வகிக்கும் குஷ்பு, கடந்த 2018-ல் நீரவ் மோடி, லலித் மோடி, நமோ என்றால் ஊழல் என குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். அது இப்போது பரவலாக கவனம் பெற்று வைரல் ஆனது. இந்நிலையில், அது குறித்து … Read more

வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

புதுடெல்லி: வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(3)-ஐ ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளது எப்படி?’ என்று தெரிவித்தார்.இதை எதிர்த்து ராகுலுக்கு எதிராக குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் … Read more

பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் இனி சுங்க கட்டணம் – எப்போது முதல் அமலுக்கு வரும்?

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைப்பான சிஐஐ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் தற்போதிய சுங்க வருவாய் 40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் 1.40 லட்சம் கோடியாக உயரும் என தெரிவித்துள்ளார். மேலும், தானியங்கி நம்பர் பிளேட் … Read more

ராகுல் காந்தி அஞ்சமாட்டார் – பிரியங்கா காந்தி கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: எனது அண்ணன் ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க மத்திய அரசு சதி செய்கிறது. அவர் எதற்கும் அஞ்சமாட்டார். எப்போதும்போல உண்மையை பேசுவார். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார். எங்கள் தந்தை ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தார்.அவரது மகனை துரோகி என்று குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒட்டு மொத்த பண்டிட் குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் … Read more

36 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் – 3 ராக்கெட்

36 இணைய தளசேவை செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் – 3 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமையன்று விண்ணில் பாயும் நிலையில், அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி கடந்த அக்டோபரில் 36 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. அதைத் தொடர்ந்து 2ஆவது கட்டமாக எஞ்சிய செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. … Read more

அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு ஒரு மாதம் கெடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. விதிகளின் படி, 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தண்டனை பெற்றால் மக்கள் பணிகளில் ஈடுபட முடியாது என்பதால், ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதனால் தற்போது அவர் வசித்து வரும் அரசு பங்களாவில் ெதாடந்து வசிக்க முடியாது. அதன்படி, … Read more

சிறை நிரப்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது வரை விமர்சனம் தொடர்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை … Read more

‘ராகுல் காந்திக்கு இது அதிகம்..’ – வாஜ்பாயை மேற்கோள் காட்டிய பிரசாந்த் கிஷோர்.!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது அதிகம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், கடந்த காலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தலில் பணியாற்றியுள்ளார். பாஜக முதல் முறை ஆட்சி அமைத்த பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற 2014 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு சார்பாக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவரை குஜராத் தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு … Read more