2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம் – பிரசாந்த் கிஷோர் கருத்து

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம். எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமைஇல்லை. பாஜகவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சியின் வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கைகளின் அடிப்படையில் பாஜக செயல்படுகிறது. இந்த மூன்றில் குறைந்தபட்சம் இரண்டு விவகாரங்களில் பாஜகவை முந்தினால் மட்டுமே அந்த … Read more

நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கோரி ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடிதம்..!!

டெல்லி: லண்டனில் பேசிய அம்சங்கள் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 6 நாட்களாக இரு அவைகளும் முடங்கியுள்ளது. லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜவினர் அமளி செய்தனர். பதிலுக்கு அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் | தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் அமலாக்கத் துறை 2-வது முறை விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் தெலங்கானா முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் … Read more

புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர், நிதியமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பேசிய தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் மருத்துவ பூங்கா அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக … Read more

கர்நாடகா | காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை – ராகுல் காந்தி வாக்குறுதி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளைஞர்க‌ளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, … Read more

பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் மியான்மருக்கு திருப்பிவிடப்பட்டது… காரணம்?

பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் மியான்மருக்கு திருப்பிவிடப்பட்டது. இண்டிகோ 6E-57 விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்ட சற்றுநேரத்தில் பயணி ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை தேவைப்பட்டதன் காரணமாக ரங்கூனுக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையம் சென்றவுடன் சம்பந்தப்பட்ட பயணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  Source link

லண்டனில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு முயற்சிக்கு சீக்கியர்கள் எதிர்ப்பு: டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன்பு திரண்டு போராட்டம்

இந்தியா: லண்டனில் இந்திய தேசிய கொடியை அவமதிப்பு செய்ய முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு காலிஸ்தான் பிரிவினை வாதிகள் புகுந்து இந்திய கொடியை அவமதிப்பு செய்ய நேற்று முன்தினம் முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீக்கிய சமூகத்தை சேர்ந்த பலர் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். மூவர்ணக்கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியபடி இந்தியா நமது பெருமை என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர் … Read more

தீவிரவாத குழுவை உருவாக்க அம்ரித்பால் சிங் திட்டம் – பஞ்சாப் போலீஸார் அதிர்ச்சி தகவல்

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங் ‘‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’’ எனும் ‘‘ஏகேஎப்’’ தீவிரவாத குழுவை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக பஞ்சாப் போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல் துறை ஐஜி சுக்செயின் கிங் கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு நிதியுதவி கிடைத்திருப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற் கில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு … Read more

Covid-19 update: அதிகரிக்கும் கொரோனா…புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில புதிய வழிகாட்டுதல்களை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைகளை எதிர்கொள்ள, சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் என ஐந்து வகையான உத்தியைப் பின்பற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள என்ன வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது பாக்டீரியா தொற்றுக்கு மருத்துவ ரீதியாக … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை -ராகுல் காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விரைவில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பெலகாவியில் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், குடும்பத் தலை விகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட வாக்குறுதிகளையும் வெளியிட்டார். … Read more