பிடிக்க வந்த போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய கஞ்சா விநியோகம் செய்யும் இளைஞர்கள்!!

ஆந்திராவில் கஞ்சா விநியோகம் செய்யும் இளைஞர்களை பிடிக்கச் சென்றபோது, புதுச்சேரி காவல்துறையினரை அரிவாளை காட்டி மிரட்டிய காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் கடந்த 24 ஆம் தேதி மேட்டகருவில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த பெட்டி ரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதீஷ் ஆகியோரை ஏனாம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தை … Read more

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர்… சர்வதேச அரசியலில் பரபரப்பு!

இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதலியை ராஜினாமா செய்துவிட்டு உள்நாட்டிலேயே குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதானது. இவரை போன்றே கோத்தபய ராஜபக்சேவும் அதிபர் பதவியை துறந்து, தப்பித்தோம்… பிழைத்தோம் என வெளிநாட்டுக்கு தப்பி ஓட வேண்டியதானது. சிங்கப்பூர், தாய்லாந்து என தஞ்சம் அடைந்திருந்த அவர், கடந்த மாதம் தான் மீண்டும் இலங்கை திரும்பினார். இந்த நிலையில், ராஜபக்சே குடும்பத்தினரின் நண்பரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ராஜபக்சே சகோதரர்களை நேரில் … Read more

மாணவர்கள் கோஷ்டிக்குள் மோதல்; பல்கலை மாணவர் மீது துப்பாக்கிச்சூடு: டெல்லி மருத்துவமனை வளாகத்தில் பதற்றம்

புதுடெல்லி: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ெடல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்தில் இரு மாணவர்கள் குழுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த சர்தஹான் கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் நோமன் சவுத்ரி (26) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹோலி … Read more

பிரதமர் மோடி துவக்கி வைத்த "வந்தே பாரத்" ரயிலில் இவ்வளவு சிறப்பம்சங்களா!? இதோ பட்டியல்!

காந்திநகர் – மும்பை இடையே “வந்தே பாரத்” ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்திநகர் – மும்பை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து, இந்த சேவையை தொடங்கிவைத்த மோடி, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார்.  இணையதள சேவைகளுக்கான வை-பை (WI-FI) உள்ளிட்ட பல … Read more

இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு – குஜராத்தில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

குஜராத்தின் அம்பாஜி நகரில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இன்று மாலை அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”இந்த பண்டிகை காலத்தில் எனது சகோதரிகளுக்கு உதவ, அரசாங்கம் அதன் இலவச ரேசன் திட்டத்தை நீட்டிக்கிறது” என அறிவித்தார். நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இக்கட்டான காலங்களில் நிவாரணம் வழங்க மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி … Read more

சோகத்தில் ஈபிஎஸ்.. உற்சாகத்தில் ஓபிஎஸ்!: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் இன்றி நடைபெற்றதால் அதனை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இந்த … Read more

உ.பி: மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த புல்டோசர்.. கலாட்டா செயத பாஜக நிர்வாகியின் மனைவி!!

பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி அனு தியாகி தனது குடியிருப்பில் உள்ள ஒரு பொது இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை வைத்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள ‘கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பாஜக விவசாயப் பிரிவுத் தலைவர் ஸ்ரீகாந்த் தியாகி. 34 வயதான இவர் கடந்த மாதம் தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை … Read more

அதிர்ச்சி! குழந்தைகளுக்கு வெறும் உப்பு கலந்து பள்ளியில் சத்துணவு!!

மதிய உணவுத் திட்டத்தில் வெறும் சாதத்தில், உப்பு கலந்து மாணவர்கள் சாப்பிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள அரசு பள்ளியில்தான் மதிய உணவுத் திட்டத்தில்தான் மாணவர்களுக்கு வெறும் சாதத்துடன் உப்பு கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அப்பள்ளி முதல்வரை மாவட்ட ஆட்சியர் பணி இடை நீக்கம் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பதிவிட்டு முதல்வர் யோகி பாபா இதை பாருங்கள் என பெற்றோர்கள் பதிவிட்டு வருகின்றனர். 2019ஆம் … Read more

கூட்டு பாலியல் வன்புணர்வு : சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூரம் – காவலரும் உடந்தை

உத்தரப் பிரதேசத்தின் மவு நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிவந்துள்ளார். அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாரில் உள்ள ஜெய்நகருக்கு வந்துள்ளார். ஜெய்நகரில் உள்ள சந்தைக்கு வந்த சிறுமி, அங்கிருந்த ஒருவரிடம் வழி கேட்டுள்ளார். அப்போது, அர்ஜூன் யாதவ் என்ற அந்த நபர், சிறுமியை கடத்தி சென்று தனது இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.  மேலும், தனது மூன்று நண்பர்களை அழைத்து, அவர்களுடன் அந்த சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை ஆதரிக்காமல் அதிர்ச்சி கொடுத்த அதிருப்தி தலைவர்கள்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூரை அதிருப்தி தலைவர்கள் ஆதரிக்காமல் அதிர்ச்சி தந்துள்ளனர். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கட்சி செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என 23 தலைவர்கள் குரல் எழுப்பினர். ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, புபிந்தர்சிங் உட்பட 23 தலைவர்கள் கையெழுத்திட்டு 2020-ல் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்.