ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என மக்களவை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து 25-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் … Read more

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரரும் மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சருமான பி.சி.ராயின் பிறந்த நாள் தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், உயிர்களைக் காக்கவும், உலக மக்களின் நலத்துக்கும் தம் கடின உழைப்பால் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் தொண்டு பற்றிய ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். Source link

புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி :புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு 2வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி நேற்று மாலை 6 மணி 2 நிமிடத்தில் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ராக்கெட்டில் வணிக ரீதியாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், 155 கிலோ எடை கொண்ட நியூசர் … Read more

'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' – உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதால், தான் எந்த கருத்தை கூறினாலும் அந்த அதிகாரம் தனக்கு கைக்கொடுக்கும் என நுபூர் ஷர்மா நினைத்தாரா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். பாஜகவின் நுபூர் சர்மா முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தியாவிலும் பல இடங்களில் போராட்டங்களும், கலவரமும், வன்முறையும் வெடித்தது. இதனை தொடர்ந்து நுபூர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் … Read more

தொழில் தொடங்க எளிதான மாநிலங்கள் – முதலிடத்தில் ஆந்திரா

புதுடெல்லி: தொழில் தொடங்குவதற்கு மிகவும் இணக்கமான சூழல் நிலவும் மாநிலங்கள் வரிசையில் முதலிடத்தில் ஆந்திரா உள்ளது. குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளன. மத்திய நிதி அமைச்சர் வெளியிட்ட இந்த பட்டியலில் இமாச்சல் (4), உ.பி. (5), ஒடிசா (6), ம.பி. (7) ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. வளர்ச்சி வாய்ப்புள்ள மாநிலங்கள் வரிசையில் அசாம் (8), கேரளா (9), கோவா (10) ஆகியன உள்ளன. இந்த வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ்நாடு … Read more

புதிய தொழிலாளர் நல கொள்கைகளின் மாற்றங்கள் இன்று முதல் அமல்.!

புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் மத்திய அரசு செய்துள்ள எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை திட்டமும் அமலுக்கு வந்துள்ளது. 3 நாட்கள் விடுமுறை இருந்தாலும் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற பழைய நடைமுறை தொடருகிறது. அதாவது, ஊழியர்கள் தினமும் 8 மணி நேரத்திற்குப் பதில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களின் மொத்த  ஊதியத்தில் 50 சதவிகிதம் … Read more

தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் :நுபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!!

டெல்லி : நுபுர் சர்மாவின் பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. … Read more

மகாராஷ்டிராவில் நடந்த திருப்பம்: முதல்வர் பதவியை மறுத்த பாஜக தலைமையின் கணக்கு: பட்னவிஸ் துணை முதல்வர் ஆனது ஏன்?

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் பாஜக தலைமையின் சில அரசியல் மற்றும் சாதிய கணக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடந்து வந்த அரசியல் திருப்பங்கள் முடிவுக்கு வந்து முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகினார். இதன் பிறகு எதிர்பார்க்கப்பட்டது போலவே பாஜக- அதிருப்தி சிவசேனா … Read more

Nupur Sharma: செய்தித் தொடர்பாளர்னா இப்படி இருக்கணும்.. பாஜகவிலேயே நல்லுதாரணமும் இருக்கு!

“ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா.. அதிகாரம் கையில் இருக்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச முடியுமா”… என்று பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை வெளுத்து வாங்கியிருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. இதே பாஜகவில் அருமையான செய்தித் தொடர்பாளரும் இருந்துள்ளார்.. அவரும் பெண்தான்.. அதை விட முக்கியமானது, அவர்தான் ஒரு தேசியக் கட்சியின் முதல் பெண் செய்தித் தொடர்பாளரும் கூட.. மறைந்த சுஷ்மா சுவராஜ்தான் அவர். செய்தித் தொடர்பாளர் என்பவர் … Read more

ஈட்டி எறிதலில் புதிய தேசியச் சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!

சுவீடனில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89 புள்ளி ஒன்பது நான்கு மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஏற்கெனவே பின்லாந்தில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியில் 89 புள்ளி 3 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்திருந்தார். Source link