11 வயது சிறுமி பலாத்கார வழக்கு; தாய், கள்ளக்காதலனுக்கு 20 வருடம் கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநில் பத்தனம்திட்டா அருகே 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன், உடந்தையாக இருந்த தாய் ஆகியோருக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை  விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை ேசர்ந்தவர் ரிஜா (31, பெயர் மாற்றம்). இவருக்கு 11 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். கணவனை விவாகரத்து செய்தவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவாகரத்தான அஜி அச்சுதனுக்கும் (46) இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அதன்படி கடந்த சில நாளாக 2 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அஜிக்கு கள்ளக்காதலியின் மகள் மீது ஒரு கண் இருந்தது. அவளை அடைய வேண்டும் என்று வெறியுடன் இருந்துள்ளான். இதற்கு கள்ளக்காதலியான சிறுமியின் தாயையும் ஒத்துழைக்க வற்புறுத்தினான். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சிறுமியின் தாய் தனது மகளை வீட்டிற்கு அருகே ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார். அங்கிருந்த கள்ளக்காதலனிடம் மகளை ஒப்படைத்தார். இதையடுத்து கள்ளக்காதலன் அஜி அச்சுதன் பகல் முழுவதும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இரவில் தற்செயலாக சிறுமியின் சகோதரர் அந்த வழியாக சென்று உள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட வீட்டில் விளக்கு எரிந்தது கொண்டு இருந்ததை கண்டார். உடனே உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. தனது சகோதரியை அஜி அச்சுதன் பலாத்காரம் செய்வதை கண்டு திடுக்கிட்டான். உடனே உறவினர்களுக்கு தகவல் கொடுத்தான்.உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து கோன்னி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுமியை மீட்டு,  அஜி அச்சுதனை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் சிறுமியின் தாயார் ரிஜா இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட, போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரிஜா மற்றும் அஜி ஆகியோருக்கு தலா 20 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தது. ரிஜாவுக்கு குழந்தை நல சட்டப்படி கூடுதலாக 3 வருடம் சிறை தண்டனையும், ரூ.25 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.