3 கேஸ் சிலிண்டர் இலவசம்.. பென்சன் உயர்வு.. பாஜக தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது?

கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் கோவாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கோவா பாஜக தலைவர் சதானந்த், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் … Read more

பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை <!– பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை –>

ஆந்திர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் சீருடை தைப்பதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு சீருடை அளவெடுக்கும் பணியில் ஆண்கள் இருந்ததால் பெண் காவலர்கள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொறுப்பிலிருந்த தலைமைக்காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Source link

உ.பி தேர்தல் பிரசாரம்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் வெற்றிப்பெறும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசம் … Read more

ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம், மாதம் 1லி பெட்ரோல் இலவசம்: உ.பி.யில் சமாஜ்வாதி வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம், மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் முன்னணி கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இன்று காலை பாஜக தனது … Read more

என் புருஷனுக்கு என்ன குறை.. வரிந்து கட்டிக் கொண்டு வரும் சித்து மனைவி!

முதல்வர் பதவிக்கு முழுமையாக தகுதியானவர் எனது கணவர். அவருக்கு என்ன தகுதி இல்லை.. ராகுல் காந்தி சரியாக ஆய்வு செய்திருந்தால் சித்துவைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பார் என்று நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சென்னியையே காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ராகுல் காந்தியே வெளியிட்டார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் … Read more

2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 49 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு <!– 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 49 பேர் குற்றவாளி… –>

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் அடுத்தடுத்து  21 குண்டுகள் வெடித்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் என்று சொல்லக்கூடிய ஐ.எம்.தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. 49 பேர் குற்றவாளிகளாக … Read more

ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு – கர்நாடகத்தில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.  இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் … Read more

கேரளாவில் மேலும் 29,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்; கேரளாவில் மேலும் 29,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு 2.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன்; எனது இந்து நண்பர்கள் துணையாக இருந்தனர்: கர்நாடக மாணவி பேட்டி

பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இன்று காலை மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக … Read more