டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிவாரண உதவிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு

செம்பனார்கோயில்: டிடிவி.தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிவாரண பொருட்களை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாமாகுடி ஊராட்சி  அப்பராஜபுரம்புத்தூர் கிராமத்தில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்த வயல்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பார்வையிட்டார். அப்போது  அவரிடம் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை விவசாயிகள் காண்பித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 200 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி … Read more

பேராசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு… உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

கொரோனா ஊரடங்கின் போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அப்போது ஆசிரியர்கள் பலர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர் பணியில் இருப்பவர்களே இதுபோன்று நடந்து கொள்வது அனைத்து தரப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது முதல் தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கியுள்ளது. மாணவர்கள் நடந்து கொள்ளும் விதிமுறைகளை கொண்டு வந்தது போலவே, பள்ளி, … Read more

செல்போனில் விளையாடியபடி சென்ற 3 வயது சிறுமி 20 அடி ஆழ கிணற்றில் விழுந்து பலி..!

திட்டக்குடி அருகே செல்போனில் விளையாடியபடி சென்ற 3 வயது சிறுமி,  கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், துபாயில் பணிபுரியும் நிலையில், அவருடைய மனைவி சங்கீதா, 6 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ரிஷ்மிதாவுடன்  வசித்து வந்தார். சங்கீதா விவசாயப் பணிக்கு செல்லும்போது,  ரிஷ்மிதாவிடம் செல்போனை கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதை வைத்து  விளையாடிய ரிஷ்மிதா, வயல் வெளிக்கு அருகே இருந்த 20 அடி ஆழ … Read more

தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று: மிக கனமழை வாய்ப்பு குறையும்

சென்னை: வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடந்த 18-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

தமிழகத்தில் முதன்முறையாக வேலூரில் மனம் திருந்திய பெண் மாவோயிஸ்ட் ஆவின் பாலகம் நடத்த ஏற்பாடு

வேலூர்: மனம் திருந்திய பெண் மாவோயிஸ்ட் வாழ்வாதாரத்திற்காக வேலூரில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டது. கர்நாடக மாநில மாவோயிஸ்ட் இயக்க மாநிலக்குழு உறுப்பினராக இருந்த பிரபா என்கிற சந்தியா (40) மீது 44 வழக்குகள் உள்ளது. அதே இயக்கத்தில் மத்தியக்குழு உறுப்பினராக இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். இவர் மீது கர்நாடகாவில் 25 வழக்குகள் உள்ளது. இருவரது தலைக்கும் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியை  2021ல் கேரள போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாவோயிஸ்ட் இயக்க செயல்பாட்டில் … Read more

காசி தமிழ் சங்கமம் கங்கா- யமுனா சங்கம் போன்று புனிதமானது: பிரதமர் நரேந்திர மோடி

காசி தமிழ் சங்கமம் கங்கா- யமுனா சங்கம் போன்று புனிதமானது: பிரதமர் நரேந்திர மோடி Source link

வருங்கால 'முதலை' அமைச்சரே வருக வருக! காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்திய பாஜகவின் அவல நிலை!

சமீப காலமாக பாஜகவும் திமுகவும் தமிழகத்தில் மொழி அரசியலை கையில் எடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்து பல்வேறு போராட்டங்களை திமுக அரங்கேற்றியது. அதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசியல் காரணத்துக்காகவே இந்தி திணிப்பு போராட்டத்தை கையில் எடுக்கிறது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி படிக்க வேண்டும் என கட்டாயமாக உள்ளது. பிள்ளை கிள்ளி விட்டு தொட்டில்லை ஆட்டிவிடும் … Read more

சிறார் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை – உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ்

சிறைக்கு செல்லும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பறவை திட்டம் குறித்து துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் உரையற்றினார். பேருந்து படிக்கட்டு பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுவதை குறிப்பிட்ட அவர், நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? என கேள்வி எழுப்பினார். காதல் திருமண விவகாரங்களில் சிறார்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது … Read more

கலையை பற்றி தெரியாதோருக்கு `கலைமாமணி' விருது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

மதுரை: கலையைப் பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கு ‘கலை இளமணி’, 19 முதல் 35 வயதுவரை ‘கலை வளர்மதி’, 36 முதல் 50 வயது வரை ‘கலை சுடர்மணி’, 51முதல் 60 வயது … Read more