'நோட்டா' போட்டி கட்சிக்கு பதிலடி கொடுங்கள்' – அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசு பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கினார். கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: “234 தொகுதிகளில் குளித்தலை தொகுதி மிகவும் சிறப்பு பெற்றது. தலைவர் கலைஞர் அவர்களை முதன் முதலில் சட்டசபைக்கு அனுப்பிய தொகுதி இது. மேலும், … Read more

சென்னை: மாடி விட்டி மாடி தாவி காப்பர் பைப்களை திருடியதாக சிறார்கள்.. சிக்கியது எப்படி?

கொரட்டூரில் மாடி விட்டு மாடி தாவி திருடும் மர்ம கும்பலை பொறிவைத்து கையும் களவுமாக கொரட்டூர் காவல் துறையினர் பிடித்துள்ளனர். சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 18-வது தெருவில் உள்ள ரூபி என்கிளேவ் என்னும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்றிரவு மாடியின் மேலே வந்த மர்ம நபர்கள் அங்குள்ள 6 வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த ஏசி-யின் காப்பர் பைப்களை மட்டும் குறி வைத்து திருடிச் சென்றதாக 5-க்கும் மேற்பட்ட … Read more

Tamil news today live : கேரளாவில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா நகரில் 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்டுள்ள சேத விவரம் … Read more

வரலாற்றில் இன்று.. தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்.!

தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை.  ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்திய மகாகவி 1921ஆம் ஆண்டு … Read more

வாழைத் தோட்டத்தில் தீப்பற்றியதில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழைகள் எரிந்து நாசம்.!

திருச்செந்தூர் அருகே வாழைத் தோட்டத்தில் தீப்பற்றியதில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழைகள் எரிந்து நாசமாகின. பத்துக்கண் பாலம் அருகே உள்ள நிலத்தில் கண்ணதாசன் என்பவர் 6 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியில் முட்செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறையினர், முட்செடிகளை அகற்றிவிட்டு தீ வைத்து அணைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. பலத்த காற்றால், அருகில் உள்ள வாழைத் தோட்டத்துக்கும் தீ பரவியது. இதில், 7 ஆயிரம் வாழைகள் தீயில் கருகின. தகவலறிந்து … Read more

மின்கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் – தேர்தல் வாக்குறுதிப்படி மாதாந்திர கணக்கீட்டை அறிவிக்காதது ஏன் என கேள்வி

சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது பாஜக தலைவர் அண்ணாமலை: மின் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்த தினத்தை தமிழகத்தின் கறுப்புநாளாக பார்க்கிறேன். மக்கள் எவ்வளவுதான் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், அடுத்த தேர்தல் வருவதற்கு ஆண்டுக் கணக்கில் உள்ளது. அதற்குள் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பது திமுகவின் மனநிலையாக உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை மக்கள்மறக்கமாட்டார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகக்கு வரலாறு காணாத அடி … Read more

மனைவியை நடுநோட்டில் இறக்கிவிட்டு மச்சினிச்சியை கடத்திய காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்!

மனைவியின் தங்கையை கடத்திய விவகாரம் தொடர்பாக கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (42). காவல் உதவி ஆய்வாளரலான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தபோது, மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் பல்வேறு வகையில் திட்டமிட்டுள்ளார். இதனால் … Read more

கக்கன் மகனின் முழு மருத்துவ செலவை ஏற்ற தமிழக அரசு; தனி குழு அமைக்கப்பட்டு சிகிச்சை

இதயம் மற்றும் சீறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கக்கனின் மகனுக்கு தனி மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் உள்துறை, பொதுப்பணித்துறை வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அமைச்சராக பதவி வகித்தவர் கக்கன். சுதந்திர போரட்ட வீரரான கக்கன், எளிமையான மனிதர் என்று பெயர் பெற்றவர். இதையும் படியுங்கள்: மருத்துவ படிப்புகளுக்கான கட்டண முறை; தேசிய … Read more

தூத்துகுடி || சாலையில் கவிழ்ந்த இருசக்கர வாகனம்.. அரசு பேருந்து மோதி இருவர் பரிதாப பலி..!

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம்,  சுந்தரவேலபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். அவர் அவரது நண்பற் ஆசிக் மற்றும் மாரிசெல்வத்துடன் இருசக்கர வாகனத்தில் முத்தியாபுரத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தூத்துகுடி – திருச்செந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் அங்குள்ள மின்கம்பத்தில் சாய்ந்தது. அப்போது, அரசு பேருந்து பேருந்து அவர்கள் மோதியது. இதில், விக்னேஷ் மற்றும் ஆசிக் இருவரும் … Read more

தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை கயிறு மூலமாக பத்திரமாக மீட்ட போலீசார்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் எச்சரிக்கையை மீறி குளிக்க சென்று  நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2பேரை போலீசார் கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர்.  திருவண்ணாமலையைச் சேர்ந்த  வினோத் மற்றும் ரவி உள்பட  குடும்பத்தினர் 10 பேர் நேற்று மாலை 6 மணி அளவில் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அதிகப்படியான நீர் வரத்தின் காரணமாக இவர்கள் இருவரும் சுமார் ஆற்றில் 300 மீட்டர் அளவிற்கு அடித்துச் செல்லப்பட்டு நடுவில் இருந்த மோட்டார் பம்ப் சிமெண்ட் … Read more