தாமிரபரணி பெயரை ‘பொருநை நதி’ என மாற்றக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் சொய்யக் கோரிய வழக்கில் மொழியியல் அறிஞர்களிடம் கருத்து கேட்டு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாகும். தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை … Read more

பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காகவே இந்த பயணம் ..! – 3வது நாள் பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு..!

இந்திய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கிய , ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ பல்வேறு தமிழக அரசியல் … Read more

திருவாடானை அருகே 100 ஆண்டு பழமையான சிவசூரிய பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

திருவாடானை: திருவாடானை அருகே 100 ஆண்டு பழமையான சிவசூரிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தில் 100 ஆண்டு பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற அரிதிலும் அரிதாக ஒரே ஆலயத்தில் சிவனும், பெருமாளும் மூலவர்களாக காட்சியளிக்கும் சிவசூரிய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கீழ்குடி கிராம பொதுமக்களால் புனரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் … Read more

மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் மயக்கம் அடைந்த மாணவிகள்! அரசுப் பள்ளியில் பரபரப்பு

ஆத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரை உட்கொண்ட பின்னர் மாணவிகள் மயக்கம்போட்டு விழுந்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாத்திரை காலாவதி ஆகவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி காந்திநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. பள்ளியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று உலக குடல் புழுக்கள் ஒழிப்பு தினம் என்பதால் மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் … Read more

ரூ.381 கோடியில் மேம்படுத்தப்படும் தூத்துக்குடி விமான நிலையம்: புதிய வசதிகள் விவரம்

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்கவும், சிறந்த சேவைகளை வழங்கவும், தொடர்புகளை விரிவுப்படுத்தவும் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி விமானநிலையத்தில் ஏ-321 ரக விமானங்களை இயக்குவதற்கு ஏற்ற வகையில், ஓடு பாதையை விரிவுபடுத்துதல், புதிய ஓடுபாதை அமைத்தல், புதிய முனையக் கட்டடம், தொழில்நுட்ப பிரிவு, கட்டுப்பாட்டு கோபுரம், புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன. 13,500 … Read more

தமிழகத்தில் விரிவான நிலையில் மருத்துவ பணி ..! – தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த புதுவை முதல்வர் ரங்கசாமி..!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய புதுவை முதல்வர் ரங்கசாமி “ தமிழகத்தில் விரிவான நிலையில் மருத்துவ பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், செந்தில் குமார், ரமேஷ், புதுச்சேரி மற்றும் தமிழக மருத்துவர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து … Read more

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு; பில்லூர்- சேர்ந்தனூர் தரைபாலம் மூழ்கியது: 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பில்லூர்- சேர்ந்தனூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் … Read more

15 கி.மீ சாலையை கடக்க 1 மணி நேரம் – போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் OMR வாசிகள்!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் (பழைய மாமல்லபுரம் சாலை) உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திப்பதாக கூறுகிறார்கள். மெட்ரோ பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் தினம் தினம் சிரமத்தை சந்திக்கும் மக்களின் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். ஐடி நிறுவனங்களால் ஆளப்படும் ஓ.எம்.ஆர். சாலை: ஓ.எம்.ஆர். ( Old Mahabalipuram Road – பழைய மாமல்லபுரம் சாலை) என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப விரைவுச் … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு 

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் … Read more

திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பல ஆயிரம் கோடியில் விளம்பரம்..! – சீமான் கடும் விமர்சனம்..!

புதுமைப்பெண் திட்டத்தை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். முதலமைச்சர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும் என கூறினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 80 சதவீத பிரச்சனைகளை, தீர்த்து வைத்ததாக தெரிவித்து வரும் நிலையில், 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி. தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் குறித்து செய்தியாளர் … Read more