#BigBreaking || திடீர் திருப்பம் – அதிமுகவின் அஸ்திவாரத்துக்கே ஆப்பு.? இரட்டை இலை – ஜேஜே கட்சியின் நிறுவனர் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.!

உட்கட்சிப் பிரச்சனைகள் சிக்கி உள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அமர்வு விசாரணை செய்ய உள்ளது. அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும், ஜேஜே கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.  கடந்த ஜூன் 28ஆம் தேதி இரட்டை இலை … Read more

’தாலி கட்டினால் தான் ஜாமின்…’ நீதிமன்ற வளாகத்தில் கைக்குழந்தையுடன் காதலிக்கு தாலி கட்டிய காதலன்..!

புதுக்கோட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில், இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. வடுகப்பட்டியைச் சேர்ந்த அஜித்தும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யாவும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அஜித், அவரை கர்ப்பமாக்கினார். இதில், சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொள்ளாமல் அஜித் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யா … Read more

பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை – இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்துகள்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு சில மணிநேரங்கள் முன்பு வெளியானது. தமிழ் சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதையும் பெற்றார் இளையராஜா. 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். … Read more

உருட்டும் விழிகள்… 1.72K ஃபாலோயர்ஸ்… இன்ஸ்டாவில் இந்தச் சிறுமியின் அதகளம் பார்த்தீர்களா?

ஜெனனிமா என்ற குழந்தையின் இன்ஸ்டிராகிரம் பக்கத்தை 1.72k ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இந்த குழந்தையின் வீடியோக்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருக்கிறார்கள். ’குக்கூ குக்கூ’ பாடலை இவர் மழலை மொழியில் பாடுகிறார். View this post on Instagram A post shared by Janani (@jananimaofficial) இது அனைவரும் கவரும் விதமாக இருக்கிறது. மேலும் செடிக்கு ஆசையாக தண்ணீர் ஊற்றுகிறார்.  செடி எப்படி வளர்க்க வேண்டும் என்று அவர் விவரிக்கிறார். விதை போட வேண்டும். … Read more

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள குப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா(22) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஈரோடு காங்கேயம் சாலையில் ஜோஸ்வா மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே வந்த முற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ஜோஸ்வாவை அப்பகுதியில் இருந்தவர்கள் … Read more

அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம்..!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயமடைந்தனர். தரடாப்பட்டு கிராமத்தில் இயங்கு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6 ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் விரிசல் ஏற்பட்ட நிலையில் திடீரென மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தன. இதில், மாணவர்கள் ஜனார்தனன், தருண்குமார், முகேஷ் ஆகியோரும், வகுப்பில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் தினகரனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் … Read more

“நெருப்புடன் விளையாட வேண்டாம்” – ஆ.ராசா பேச்சுக்கு வானதி கண்டனம்

கோவை: “நெருப்புடன் விளையாட வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, ”பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடுதான் … Read more

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி இருக்கும்? – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் பத்தாம் தேதி வரை, சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் நீலகிரி … Read more

‘காளி போஸ்டர் நீக்கு…’ லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிரடி சரஸ்வதி கைது

‘காளி’ படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கவிஞர், திரைபட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த விகாரத்தில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் அதிரடி சரஸ்வதி கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில், கவிஞர் லீனா மணிமேகலை ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதில், காளி வேஷத்தில் இருக்கும் பெண் சிகரெட் புகைப்பதை போல போஸ் கொடுத்தபடி இருக்கிறார். காளி வேஷத்தில் உள்ள பெண் வாயில் சிகரெட் வைத்திருக்கிற போஸ்டர் இந்து மத … Read more

கனமழை காரணமாக நாளை மற்றும் மறுநாள் இந்த தாலுகாவிற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவிற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவ்வபோது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை … Read more