அச்சிறுப்பாக்கம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு; மோடி இரங்கல்: முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே முன்னால்சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து 30 பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று காலைசென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை முரளி என்பவர் ஓட்டினார். அச்சிறுப்பாக்கம் அடுத்ததொழுப்பேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனத்தை முந்திசெல்வதற்காக ஓட்டுநர் இடதுபக்கமாக ஏறிச்சென்றதாகவும் அப்போது, இடதுபக்கம் இரும்புக் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரிக்கும் வலதுபுறம் … Read more

கன்னியாகுமரி: திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள வில்லங்க போஸ்டர்

கருங்கல் அருகே திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சிலர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து … Read more

வருங்காலத்தில் இந்த பாடப்பிரிவு முக்கியத்துவம் பெறும்: மாணவர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அட்வைஸ்

மத்திய மண்டலத்திற்குட்பட்ட  திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் 12-ம் மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காவல்படைத் தலைவர் சைலேந்திர பாபு கலந்து கொண்டார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில், ’தழைக்கட்டும் நமது தலைமுறை’ என்ற தலைப்பில்,  மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்வு  நடைபெற்றது. … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (09.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 09/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 18 நாட்டு தக்காளி 12/10 உருளை 33/25/20 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 50/45/40 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 60/50/40 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 28/25 சவ் சவ் 20/15 முள்ளங்கி 20/18 முட்டை கோஸ் 30/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 15/10 வரி கத்திரி … Read more

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: கணினி அறிவியல் பாடத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலைஅண்ணா பல்கலை. வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் இவை நிரப்பப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு ஆக.16 முதல் அக்.14-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுகடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. இதுவரை 1.6 … Read more

தூத்துக்குடி: 1330 குறள்களை 32 நிமிடங்களில் ஒப்பித்து சாதனை – பள்ளி மாணவனுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா மற்றும் திருக்குறள் சொல்வதில் உலக சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரசாத், சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 32 நிமிடத்தில் 1330 திருக்குறள்களை ஒப்பித்து உலக சாதனை படைத்துள்ளார். அந்த மாணவனின் சாதனையை பாராட்டும் வகையில் தமிழ் இலக்கிய மன்ற … Read more

தனித் தமிழ்நாடு சாத்தியமே இல்லை: திருநாவுக்கரசர்

க. சண்முகவடிவேல் Su. Thirunavukkarasar M.P Tamil News: திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் மேஜை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:- அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.தவறு செய்தால் கட்டாயமாக பலன் அனுபவிக்க வேண்டும். இல்லை என்றால் நிரபராதியாகலாம். உண்மையான தகவலோடு தவறு செய்திருந்தால் … Read more

மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் மறைத்து விட்டு கணவர் ஓட்டம்..! ரூ.28 லட்சம் ஆன்லைன் ரம்மியால் விபரீதம்..!

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே வீட்டை விற்று கிடைத்த 28 லட்சம் ரூபாயை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதை கண்டித்த மனைவியை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டு மறைத்து விட்டு தலைமறைவான சூதாடி கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த தாளக்குடி சாய் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ், இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 5 நாட்களாக தங்கள் மகள் சிவரஞ்சனியின் செல்போனை தொடர்பு கொள்ள இயலாத … Read more

சென்னை வானகரத்தில் அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் பொதுக்குழு அரங்கம்

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை நடத்த சென்னை வானகரத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதில்பங்கேற்க வரும் உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாகவே சென்னை வருமாறு அதிமுக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை வானகரத்தில் கடந்தஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்,தயார் நிலையில் வைத்திருந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, கட்சி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி … Read more