4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்.. புதிய விதிகள் அறிவிப்பு <!– 4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டா… –>

இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் தான் செல்ல வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், நான்கு வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தத்தைச் சேர்த்துள்ளது. அதன்படி இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கச்சையும், தலைக்கவசமும் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் … Read more

புதுச்சேரியில் விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கும்: ஆளுநர் தமிழிசை உறுதி

புதுச்சேரி: “புதுச்சேரியில் விமான சேவை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும்” என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் 126-ம் ஆண்டு மாசிமக கடல்தீர்த்தவாரி உற்சவம் இன்று (பிப். 16) நடைபெற்றது. இதில் புதுச்சேரி மணக்குள விநாயகர், காந்தி வீதி காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள், நேற்று வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு, கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் … Read more

'2.15கோடி பைக்கு ரூ.130 கோடி கமிஷன் பெற்றுள்ளனர்' – அண்ணாமலை குற்றச்சாட்டு

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட மஞ்சப்பையை அதிக விலைக்கு வாங்கி திமுக ஊழல் செய்துள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ‘ மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்னையை ஏற்படுத்துகிறார். பொங்கல் தொகுப்பில் உள்ள மஞ்சள் பை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ.10 மதிப்புள்ள மஞ்சள் பையை ரூ.60க்கு வாங்கியுள்ளனர். 2.15கோடி பைக்கு ரூ.130 கோடி கமிஷன் பெற்றுள்ளனர்.மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றெல்லாம் இந்த … Read more

அரசியலில் இளம் ஜோடிகளான மேயர், எம்எல்ஏ தம்பதி… இது கேரள லவ் ஸ்டோரி

டிசம்பர் 2020 இல், கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார். அவர் இந்தியாவின் இளம் வயது மேயர் என அழைக்கப்பட்டு, அவரது புகழ் பரவியது. பின்னர், 5 மாதங்களுக்கு பிறகு, தற்போதைய கேரள சட்டசபையின் இளம் சட்டமன்ற உறுப்பினராக கே.எம்.சச்சின் தேவ் பதவி விகித்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா மற்றும் சச்சின் தேவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, “நாங்கள் இருவரும் … Read more

தமிழகத்தை சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.!

சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், மாநில அரசின் நிதியே பயன்படுத்தப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது, 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீமை கருவை மரங்களை அகற்றி உள்ளதாகவும், வேருடன் அகற்ற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. … Read more

ஈரோடு அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. <!– ஈரோடு அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் மார… –>

ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் உயிரிழந்தார். அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பெருமாபாளையத்தை சேர்ந்த ஐயப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வீட்டில் இரவில் துங்கிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தார் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வேட்பாளர் உயிரிழந்ததால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் தேர்தல் ரத்தாகும் என … Read more

கோவையில் ’மிரட்டும்’ கரூர் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை: ”கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரை தேர்தல் ஆணையம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவரும் சூழலில், கோவையின் பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். … Read more

திமுக சிறப்பாக ஆட்சி செய்தால் பாஜக எப்படி வரும்? சீமான் சிறப்பு நேர்காணல்

“வீடுதேடி தெருத் தெருவா அழைந்தேன்; ஆனால் வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கிறார்கள்” என சிறப்பு நேர்காணலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையோடு பதிலளித்தார். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் சூடான சுறுசுறுப்பான பரப்புரையில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை … Read more

நம்பிக்கை தரும் உள்ளாட்சித் தேர்தல் “ஆர்டர்கள்”; மகிழ்ச்சியில் திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள்…

பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையம் கழுகு கண்களோடு ஒவ்வொரு நிகழ்வையும் கண்காணித்து வருகின்ற நிலையில், எந்த விதமான சிக்கலும் இன்று தேர்தல்களை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் காவல்துறையினர். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்தியில் திருப்பூரில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர பனியன் கம்பெனிகள் தற்போது, … Read more

"ஆம்பளையா.. இருந்தா ஸ்டாலின் இதை செய்யட்டும்" ஆவேசம் காட்டிய சிவி சண்முகம் மீது போலீசார் நடவடிக்கை.!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். அதன்காரணமாக தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அந்தவகையில் விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, திமுக … Read more