சிங்கம்புணரி மஞ்சுவிரட்டு – மாடு முட்டி பார்வையாளர் சம்பவ இடத்தில் பலி

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசி மகாமகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டிக்கு சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. வாடிவாசலில் அவிழ்த்துவிட 120 காளைகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், அதற்கு முன்பே ஆங்காங்கே 300ற்கும் மேற்பட்ட கட்டு மாடுகள் அவிழ்த்து … Read more

விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் என்டரி ஆன நடிகர் : பாரதி கண்ணம்மா அவ்வளவுதானா?

Tamil Serial Update : விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் 2. மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் கலக்கி வரும் இந்த சீரியல் குடும்ப உறவுகளிடையே நடக்கும் சண்டை மற்றும் சச்சரவுகளை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், அடிக்கடி இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. திருப்பங்கள் பல வந்தாலும், மாயன் மற்றும் மகா இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு … Read more

#சற்றுமுன் || நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத், கஞ்சா வைத்திருந்ததாக கைது.! 

புதுக்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை நகராட்சி வேட்பாளர் ஒருவரை, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி 23 வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத், தற்போது கஞ்சா வைத்திருந்ததற்காக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வேட்பாளரின் நண்பர் முரளி மற்றும் … Read more

"பொது ஊழியர் நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்" – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து <!– &quot;பொது ஊழியர் நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்… –>

பொது ஊழியர் என்பவர் நேர்மையாகவும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் பதிவுத் துறையில் ஏற்கனவே ஊழல்கள் அதிகம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும் சந்திரசேகரன் என்பவர் வரும் ஜூன் மாதம் ஓய்வுபெறவுள்ள நிலையில், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. பொது ஊழியரான ஒருவர் தனக்கான பதவியையோ, பணி இடத்தையோ … Read more

இறுதிக்கட்ட பணியில் சீமை கருவேல மரங்களை அழிக்கும் திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பொதுத்தளத்தில் இதுகுறித்து வெளியிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்த … Read more

விஜய்யை போல தத்ரூப தோற்றம் – கேரள நபரை அழைத்து வந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரம்!

நடிகர் விஜய்யை போல தத்ரூப தோற்றம் கொண்ட கேரள நபரை ஈடுபடுத்தி விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரசாரம் மேற்கொண்டனர். மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 88வது வார்டில் நாகேஸ்வரி என்பவர் போட்டியிடுகிறார். இதில், வாக்கு சேகரிக்க நடிகர் விஜய்யை போல தத்ரூப தோற்றம் கொண்ட கேரளாவை சேர்ந்த இளைஞரை அழைத்துவரப்பட்டார். அப்போது அவரை 88 வது வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபடுத்தினர். நடிகர் விஜய்யை போல … Read more

‘இதை அ.தி.மு.க- பா.ஜ.க-விடம் கேளுங்க’ கேஸ் விலையை கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு கனிமொழி பதில்

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவரிடம் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என பெண்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‌ மேலும், தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர் மற்றும் கன்னியாகுமரி … Read more

4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்.. புதிய விதிகள் அறிவிப்பு <!– 4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டா… –>

இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் தான் செல்ல வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், நான்கு வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தத்தைச் சேர்த்துள்ளது. அதன்படி இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கச்சையும், தலைக்கவசமும் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் … Read more

புதுச்சேரியில் விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கும்: ஆளுநர் தமிழிசை உறுதி

புதுச்சேரி: “புதுச்சேரியில் விமான சேவை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும்” என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் 126-ம் ஆண்டு மாசிமக கடல்தீர்த்தவாரி உற்சவம் இன்று (பிப். 16) நடைபெற்றது. இதில் புதுச்சேரி மணக்குள விநாயகர், காந்தி வீதி காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள், நேற்று வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு, கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் … Read more