‘யங்’ ரஜினி ‘தலைவர் 169’ படத்தின் அறிவிப்பு வெளியீடு

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய புதிய படமான ‘ரஜினி 169’ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய 169வது படத்தைப் பற்றிய அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், சிறுத்தை … Read more

கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக் புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.. விஜயகாந்த்.!!

கல்வி கற்கும் இடத்தில் மதத்தைக் புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து சென்ற சம்பவத்தால் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.   கல்வி கற்கும் இடத்தில் அனைவரும் சமம் என்ற உணர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு சீருடை என்ற திட்டமே கொண்டு வரப்பட்டது. கல்விக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. … Read more

தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு <!– தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து … –>

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா தனது 8 மற்றும் 12 வயது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அண்ணன் வீட்டருகே உள்ள கிணற்றில் துணி துவைக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கிணறு அருகே விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் அடுத்தடுத்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை காப்பாற்ற ரேகாவும் … Read more

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை

சென்னை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை வலியுறுத்தியுள் ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அதிகாலை 1.20 மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இத்தகவல் அறிந்ததும், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக தூத்துக்குடி சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனே சென்னை … Read more

நின்றிருந்த லாரி மீது மாநகர பேருந்து மோதி விபத்து: நொறுங்கிய கார்

சாலையில் நின்றிருந்த லாரி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்கால் அருகே சாலையில் யூ டர்ன் செய்வதற்காக வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரி வேனை இடது பக்கமாக முந்தி செல்ல முயன்றது. ஆனால் முடியாததால் லாரி நின்றிருந்தது. இதை கவனிக்காத மாநகர பேருந்து ஓட்டுநர் லாரி மீது மோதியதில் ஓட்டுநர் வெங்கடேசன், நடந்துநர் ஹரிஹரன் உட்பட … Read more

எது முதன்மையானது – தேசம் அல்லது மதம்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

What is paramount – nation or religion, asks Madras High Court: நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சில சக்திகளின் வளர்ந்து வரும் போக்கு குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம், எது முதன்மையானது – தேசம் அல்லது மதம் என்று கேட்டு அதிருப்தி தெரிவித்தது. கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள சூழலில், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், … Read more

திமுக – காங்கிரஸ் மோதல்., தனித்து களமிறங்கும் காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை.!

நாமக்கல் நகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள அனைத்து வார்டுகளிலும், திமுகவை எதிர்த்து காங்கிரஸ் களமிறங்க உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 16-வது வார்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, அந்த வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தது. இதற்கிடையே,  அதே 16வது வார்டில் திமுக வேட்பாளரை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தது. இருவரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகளால் ஏற்கப்பட்டது. இது கூட்டணிக் கட்சிகளான … Read more

இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு உருவான இயக்கம் தி.மு.க – முதலமைச்சர் <!– இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு உருவான இயக்கம்… –>

திமுக தான் இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு, உணர்வோடு உருவான இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும்  கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழர்களுக்கான உரிமையை மீட்பதற்காக, தமிழ் மொழியை காப்பதற்காக,  தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக போராடி வருவதாக கூறினார். ஈரோட்டை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் … Read more

பிப்ரவரி 10: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.9 வரை பிப்.10 பிப்.9 … Read more