#BREAKING || நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – காஞ்சியின் 36 வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு.!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். 37 வயதாகும் இவர், அந்த பகுதியில் அதிமுகவின் தீவிர ஆதரவாளராகவும், அதிமுக பிரமுகரும் இருந்து வருகிறார். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக வேட்பாளராக களமிறங்கி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஜானகிராமன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார், அவரின் … Read more

இன்று தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் <!– இன்று தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் –>

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 12 அன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், … Read more

நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் அளிப்பதா? – இது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும்: கி.வீரமணி

சென்னை: நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில் அளிப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பது – வேற்றுமையில் ஒற்றுமையைக் குலைக்கும் – ஒருமைப்பாட்டையும் சிதறடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், ”அமைச்சர் பதில் அளிப்பது ஆங்கிலத்தில் … Read more

தமிழகத்தில் 87% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: சுகாதாரத் துறை சர்வே ரிசல்ட்

Tamilnadu News Update : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் பொது சுகாதார இயக்குநரகம் நடத்திய 4-வது கட்ட ஆய்வில், தடுப்பூசி போடப்படாத 11 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 68% பேருக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்தும் எஸ்ஏஆர்எஸ் (SARS-CoV-2) வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இருந்துள்ளது. ​​18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படாத நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில், பல குழந்தைகளில் கண்டறியக்கூடிய அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது … Read more

4ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்.. உறவினர்கள் போராட்டம்.. புதுக்கோட்டை அருகே பரபரப்பு..!

நான்காம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் நாடிமுத்து. இவருக்கு திருமணமாகி போதினி என்ற மனைவியும் கிருஷ்ணவேணி என்ற மகளும் நிதிஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வருகின்றர். நேற்று பள்ளிக்கு சென்ற அவன் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், அந்த மாணவனின் வகுப்பாசிரியர் அவனிய வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு … Read more

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: மார்ச் 5-ல் தீர்ப்பு

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மார்ச் 5-ல் மதுரை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், … Read more

படகு ஏலத்தை தொடங்கிய இலங்கை… அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் இலங்கையில் உள்ள ஐந்து துறைமுகங்களில் ஏலம் விடுப்படுகிறது. இந்த ஏலம் விடும் பணி, பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் 135 படகுகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏலத்தின் முதல் நாளிலேயே … Read more

போராடிய கவுரவ  விரிவுரையாளர்கள்., மறைமுகமாக மிரட்டல் விடுத்த தமிழக அரசு – மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள்  தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மூன்று நாட்களாக போராட்டம் நடத்திய கவுரவ விரிவுரையாளர்களுடன் பேச மறுத்து விட்ட தமிழக அரசு, அவர்களை மறைமுகமாக அச்சுறுத்தி போராட்டத்தை கைவிடச் செய்துள்ளது.  உரிமை கேட்டுப் போராடியவர்களின் கோரிக்கைகளைக் கூட அரசு கேட்க மறுப்பது நியாயமற்றது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 108 … Read more