மைக்ரோசாப்ட், அமேசானை தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸான் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் அதன் மொத்த பணியாளர்களில், செயல்திறன் சரியில்லாத 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறது. செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதிய திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், தலைமை நிர்வாக அதிகாரியாக இதற்கு முழுப்பொறுப்பேற்பதாகவும் பணியாளர்களுக்கு அனுப்பிய … Read more

ஐநா.சபை குழுவினர் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை… பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைத் திரும்ப வழங்கும்படி கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி,வேலை மற்றும் கலாசார உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று தாலிபன் தலைவர்களுடன் ஐநா.சபை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐநா.துணைப் பொதுச் செயலாளர் அமீனா முகமது தலைமையிலான குழு ஒன்று காபூலுக்குச் சென்றுள்ளது.அக்குழுவினர் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்கள் பேச்சுவார்த்தை மூலம் பெண்களுக்கு எதிராக உள்ள சில தடைகள் நீக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தனர். Source link

பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் ரயில் தடம்புரண்டு விபத்து.. 15 பேர் படுகாயம்

பாகிஸ்தானில், ரயில் தண்டவாளத்தை மர்மநபர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்ததால் ரயில் தடம்புரண்டு 15 பேர் காயமடைந்தனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டம் அருகே ரயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அதிவேகமாக வந்த பயணிகள் ரயிலின் 8-க்கும் மேற்பட்ட ரயில்பெட்டிகள் தடம்புரண்டன. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலூச் தீவிரவாதக் குழுவின் சதிவேலையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

சீனாவில் கோவிட் டெஸ்ட் கருவி தயாரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

சீனாவின் சாங்கிங் நகரில் கோவிட் பரிசோதனைக் கருவிகள் தயாரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கோவிட் சோதனையில் தங்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி நிறுவனத்திற்கு எதிராக  அவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீசாருடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மோதியதால் வன்முறை தலைவிரித்தாடியது. பரிசோதனைக்காக குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருந்த கண்ணாடிக் குப்பிகளை தொழிலாளர்கள் உடைத்து நொறுக்கினர். Source link

குரங்குகளை கொலை செய்ய அனுமதி அளித்த நாடு – காரணம் என்ன?

பிலிப்ஸ்பர்க், ‘வெர்வெட்’ குரங்குகள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். இந்த வகை குரங்குகள் 17-ம் நூற்றாண்டில் கரீபியன் தீவுப்பகுதிகளை வந்தடைந்தன. இந்நிலையில், கரீபியன் நாடான சின்ட் மார்டனில் ஒட்டுமொத்த வெர்வெட் குரங்குகளையும் அழிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை குரங்குகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிர்களைத் தாக்கி வாழ்வாதாரத்தையே அழித்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர். இதனால் வெர்வெட் குரங்குகள் அப்பகுதி மக்களால் தொல்லையாக கருதப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து … Read more

காடுகளில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்.. கொக்கைன் போதைப்பொருள் உற்பத்தி கூடாரங்கள் தகர்ப்பு!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்து வந்த ஆலைகளை போலீசார் தகர்ந்தெறிந்தனர். கோச்சபம்பா வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு ராணுவத்தினர், காட்டின் மையப்பகுதியில் படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் நாளொன்றுக்கு 100 கிலோ அளவில் கொக்கைன் போதைப் பொருள் உற்பத்தி செய்துவந்த இரு கூடாரங்கள் அழிக்கப்பட்டன. Source link

ஆப்கானிஸ்தானில் கடும் உறை பனி; 78 பேர் உயிரிழப்பு

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை எந்தவொரு நாடும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கான சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தானில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு … Read more

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த போலீசார்!

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அந்நாட்டு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து வீடியோ ஒன்றில் பேசிக் கொண்டே பயணித்த ரிஷி சுனக், சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து நாட்டின் உயர் பதவியில் இருப்பவரே சட்டத்தை மீறியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Source link

உக்ரைனுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கோடி ராணுவ உதவிஅமெரிக்கா வழங்குகிறது

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கான சூழல் தென்பட்டது முதல் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. அமெரிக்கா வழங்கி வரும் அதிநவீன ஆயுதங்களை கொண்டே உக்ரைன் ராணுவம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 20,288) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க … Read more