திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்
திருப்புவனம்: திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: அஜித்குமாரை போலீஸார் அடித்தே கொன்றுள்ளனர். அவரைக் கொன்றவர்களுக்கும் இதுபோன்ற தண்டனை கொடுக்க வேண்டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசாரிக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் சிபிஐ உண்மையை வெளிக்கொணர வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வரதட்சணைக் … Read more