Election 2019: சூடு பிடிக்கும் தேர்தல் களம்… தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம்

Election 2019 AIADMK DMK Campaign Live Updates : தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று(மார்ச்.20) தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதேபோல், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், நேற்று தேனி … Read moreElection 2019: சூடு பிடிக்கும் தேர்தல் களம்… தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம்

பாஜக.வின் 5 வேட்பாளர்கள்: தூத்துக்குடி- தமிழிசை, ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்

பாஜக.வின் 5 வேட்பாளர்கள் விவரம் தெரிய வந்தது. தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன், சிவகங்கையில் ஹெச்.ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் போட்டியிட இருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இன்று மாலை வரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக அணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம் தெரிய வந்திருக்கிறது. அதன்படி தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், … Read moreபாஜக.வின் 5 வேட்பாளர்கள்: தூத்துக்குடி- தமிழிசை, ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்

மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடை

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவை கூறித்தும் கோடநாடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். இந்தப் பேட்டி, அடுத்த நாள் முரசொலி நாளிதழில் செய்தியாக வெளியானது. இந்நிலையில் … Read moreமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடை

புதிய பரபரப்பை கிளப்பும் சாதிக் பாட்சா மனைவி.. உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் என்று கூறப்படும் சாதிக் பாட்சாவின் மனைவியான ரெஹ்னா பானு கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தை நாடியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து … Read moreபுதிய பரபரப்பை கிளப்பும் சாதிக் பாட்சா மனைவி.. உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு!

தந்தூரி சிக்கன் ஏன் ரொம்ப நல்லது தெரியுமா?

நிறைய முறை தந்தூரி சிக்கன் வித் நாணை நம்மில் பலரும் ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்போம். சப்பிட்டு முடித்ததும், ”அடடே இன்னிக்கு கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டுட்டோமோ?” என பெரும்பாலானோர் ஃபீல் பண்ணியிருப்போம். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை தெரிந்து வைத்துக் கொள்வது நல்ல விஷயம். உதாரணமாக தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் … Read moreதந்தூரி சிக்கன் ஏன் ரொம்ப நல்லது தெரியுமா?

3 கட்டைப் பைகளுடன் சிறையை விட்டு வெளியேறினார் நிர்மலாதேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் ஓராண்டாக அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 6 முறை தாக்கல் செய்த மனுவும், நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. சிறையை விட்டு வெளியேறினார் நிர்மலாதேவி இந்நிலையில் நிர்மலா தேவியின் … Read more3 கட்டைப் பைகளுடன் சிறையை விட்டு வெளியேறினார் நிர்மலாதேவி

பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மேற்கொண்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரி மாறன் சகோதரர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி … Read moreபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…

பெண் ஊடகவியலாளருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய விவகாரம்… 4 பேரை கைது செய்தது…

Journalist Barkha Dutt harassment Issue : பிரபல ஊடகவியலாளரான பர்கா தத்திற்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பிய இளைஞர்களை கைது செய்தது காவல் துறை.  கடந்த பிப்ரவரி 19ம் தேதி, பர்கா தத்தின் தொலைபேசி எண் சமூக வலைதளங்களில், ”எஸ்கார்ட் சேவைகள் தேவைப்பட்டால் அழைக்க” என்ற போலி விளம்பரத்துடன் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பர்கா தத் ஸ்மார்ட்போனிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள், ஆபாச குறுஞ்செய்திகள், மற்றும் ஆபாச புகைப்படங்களை மர்ம நபர்கள் அனுப்பி … Read moreபெண் ஊடகவியலாளருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய விவகாரம்… 4 பேரை கைது செய்தது…

‘திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்’ – அமைச்சர் ராஜேந்திர…

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமல்படுத்துவதை 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையாக பாமக முன்னெடுத்தது. பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், ‘முதல்வரானால், எனது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான்’ என்றார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. மேலும் படிக்க – Election 2019 Live Updates, தமிழக தேர்தல் களம் லைவ் … Read more‘திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்’ – அமைச்சர் ராஜேந்திர…

நாட்டில் வேலை செய்யும் ஆண்களின் விகிதம் குறைவு – ஷாக் ரிப்போர்ட்

இந்தியாவில் 1993-94-லிருந்து முதன்முறையாக வேலை செய்யும் ஆண்களின் அளவு சுருங்கியிருக்கிறது. என்.எஸ்.எஸ்.ஓ 2017-2018-ல் எடுத்த சர்வேயின் படி நாட்டில் 28.6 கோடி ஆண்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது. 1993-94 ஆம் ஆண்டு என்.எஸ்.எஸ்.ஒ கணக்கெடுப்பு நடத்தியபோது 21.9 கோடி ஆண்கள் பணியிலிருந்தனர். 2011-12-ல் அது 30.4 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் ஆண் தொழிலார்களின் விகிதம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை. கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2017-18-ம் ஆண்டில் குறைவான ஆண்கள் மட்டுமே வேலை செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. … Read moreநாட்டில் வேலை செய்யும் ஆண்களின் விகிதம் குறைவு – ஷாக் ரிப்போர்ட்