சரக்கு ரயில் தீ விபத்தால் 8 ரயில்கள் ரத்து

சென்னை திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து ஏற்பட்டதால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சென்னையில் இருந்து மைசூருக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது  திருவள்ளூஎ அருகே கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் சென்னை திருவள்ளூர் புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயங்கி வருகிறது. சரக்கு … Read more

செஞ்சி கோட்டையை பாரம்பரிய சின்னமாக அறிவித்ததற்கு கமலஹாசன் மகிழ்ச்சி

சென்னை செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்ததற்கு கமலஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யுனெஸ்கோ தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது  இதற்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிkamaல், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும். தற்போது  இந்தப் … Read more

அதிமுக அமித்ஷாவுக்கு கூறும் பதில் என்ன? : கீ வீரமணி

சென்னை திராவிடர் கழக தலைவர் கி வீரமணி அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்துள்ளார்.. இன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ”அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜனதா கூட்டணி அரசே தமிழ்நாட்டில் அமையும் என பகிரங்கமாய் பேசி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க. தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம் என கூறி வருகிறது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் அமையும். அதுவும் எங்கள் … Read more

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம்

ஐதராபாத், பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.   கோட்டா சீனிவாசராவி தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகர் ஆவார்.  இவர் ஏராளமான தெலுங்கு திரப்படங்களில் வில்லனாக தொன்றி உள்ளார்.  மேலும் தமிழிலும் நடிகர் விக்ரமின் சாமி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமாகி மேலும் பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.  அண்மைக்காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக  கோட்டா சீனிவாச ராவிசிகிச்சைப் பெற்று வஜுறார். … Read more

இதுவரை அமர்நாத் கோவிலில் 1.82 லட்சம் பேர் தரிசனம்

அமர்நாத் கடந்த 3ம் தேதி முதல் அமர்நாத் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை 1.82 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். இந்து மதக்கடவுள் சிவன் கோவில் ஒன்று ஜம்மு- காஷ்மீரில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பனிசூழ்ந்த மலையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். கடந்த 3ம் தேதி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கியது . முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனி லிங்கத்தை … Read more

தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நிதி நிறுவன மோசடி நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்துள்ளது. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வரும் தென் மாவட்டங்களில் நடந்த நிதி நிறுவன மோசடி குறித்த வழக்குகளில் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குனர்கள் பெற்ற ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும், முதலீட்டு தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. நேற்று இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் … Read more

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் சம்பவங்கள்: வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான  மற்றும் பாலியம் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் சென்னை அருகே உள்ள வண்டலூர் தனியார் குழந்தைகள் காப்பத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது தெரிய வந்ததுள்ளது. புகாரின் பேரில்,  வண்டலூர் தனியார்  குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்த, காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் – திமுக ஊழல் பட்டியல் மிக நீளம்! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதி!

சென்னை: அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசின் ஊழல் பட்டியல் மிக நீளம் என்று கூறியதுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டார். தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தலைவரான அமித்ஷா கூறி வருகிறார். அதை சில பாஜக … Read more

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நடிகை எல்லி அவ்ரம் பிரபல யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி உடன் நிச்சயதார்த்தம்

பிரபல இந்திய யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஷிஷ் சஞ்சலானி தனது சமூக ஊடகங்களில் எல்லியை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “இறுதியாக” என்று எழுதியுள்ளார். இதன் மூலம், அவர் நடிகையுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். ஆஷிஷ் சஞ்சலானிக்கு யூடியூப்பில் 3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 70 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ளனர். அவர் … Read more

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

“கிழக்கின் ட்ராய்” என்று பிரபலமாக அழைக்கப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செஞ்சி கோட்டை தமிழ்நாட்டில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டை. இது விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூன்று மலைகளை உள்ளடக்கிய இந்த கோட்டை, முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ராஜகிரி மற்றும் சஹ்லிதுர்க் … Read more