வாக்களித்த மை தடவிய நகத்தைக் காட்டினால் இலவச ஃபில்டர் காபி! மெட்ராஸ் காபி ஹவுஸ் அறிவிப்பு…

சென்னை: பொதுமக்களிடம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், வாக்காளர்களுக்கு இலவச காபி திட்டத்தை அறிவித்துள்ளது மெட்ராஸ் காபி கவுஸ் நிறுவனம். இந்த இலவச காபி இன்று மாலை 5மணிக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, இன்று தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஊக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், மெட்ராஜ் காபி நிறுவனமும்,  வாக்காளர்கள், வாக்களித்துவிட்டு, அவர்களின் மை தடவிய நகத்தைக் காட்டினால், … Read more

வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டமா? வாக்களர்கள் தெரிந்துகொள்ள இணையதள வசதி….

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இணையதள வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 18வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  வாக்குச்சாவடியில் வரிசை நிலையினை, அதாவது வாக்காளர்கள் கூட்டம் … Read more

வாக்காளர்களே ‘வோட்டர் அடையாள அட்டை இலையா?’ ஆதார் உள்பட 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்..

சென்னை: வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த, அடையாள அட்டையான வோட்டர் ஐடி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைய தேவையில்லை.  அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள  ஆதார் கார்டு உள்பட  11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு தங்களது வாக்கினை செலுத்தலாம். அதுபோல பூத் சிலிப் இல்லாதவர்கள் வோட்டர்ஹெல்ப்ஆப் மூலமோ அல்லது வாக்குச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள முகவர்களிடம் பூத்சிலிப் பெற்றுக்கொண்டு தங்களது வாக்கினை செலுத்தமுடியும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7மணிக்கு … Read more

எடப்பாடி பழனிச்சாமி மீது தயாநிதி மாறன் வழக்கு!

சென்னை: தொகுதி நிதியை நான் மக்களுக்கு செலவழிக்கவில்லை என்று வறிய எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடருவதாக அறிவித்துள்ள  மத்திய சென்னை எம்.பி. வேட்பாளர் தயாநிதி மாறன்,  95% தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன்” என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வு அடைந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக கூட்டணி தலைவரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக … Read more

நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிபு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்றுவிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில்  மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் … Read more

சட்டவிரோத பண பரிமாற்றம்: சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்க்துறை திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக,  சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் முபாரக் உசேன் என்பவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று நுங்கம்பாக்கம் குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் … Read more

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம்… பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா

13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘மணிகன்ட்ரோல்’ இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, டெல்லி, உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் … Read more

மக்களவை தேர்தல் 2024: இதுவரை 4,861 புகார்கள், 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, முதியோர், கர்ப்பிணிகளுக்கு பிக்கப் டிராப் வாகனம்! தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தகவல்..

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாடிகளில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, என்றும், தேர்தல் தொடர்பாக இதுவரை 4861 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,  கர்ப்பிணிகள், மாற்றுத்திறநாளிகள், முதியோர்கள் வாக்களிக்கும் வகையில், பிக்கப் டிராப் வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார். நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  அதன்படி, … Read more

நாளை வாக்குப்பதிவு: விழிப்புடன் செயலாற்ற வேண்டும்! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாளை காலை  வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மக்களை தேர்தலையொட்டி, நாளை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது.  தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும்  950 வேட்பாளர்கள் உள்ளனர். திமுக சார்பில் 23 வேட்பாளர்களும், அதிமுக 34 , பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், … Read more

ஐதராபாத், குண்டூரைச் சேர்ந்த 2 இந்திய மாணவர்கள் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் திருடியதாக கைது

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நியூ ஜெர்சி நகரில் உள்ள ஹோபோகன் ஷாப்ரைட் என்ற கடாயில் அவர்கள் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். 20 மற்றும் 21 வயதுடைய இளம் பெண்கள் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் குண்டூரை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் … Read more