சியாச்சின் அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா புதிய சாலை அமைப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்…

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் (PoK) ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சாலை 1963 இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது, சீனாவின் ஜின்ஜியாங்கில் G219 நெடுஞ்சாலையின் ஒரு பிரிவில் இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது. இந்தியாவின் வடக்குப் புள்ளியில் இருந்து சுமார் 50 கிமீ வடக்கே, … Read more

இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல்

புலிவெந்துலா. இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்ப்மனுத் தாக்கல் செய்துள்ளார். வரும் மே 13 ஆம் தேதி அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கட்ந்த 18 ஆம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவருமான … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்ச்ர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதைத்  தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். … Read more

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ‘ஸ்மார்ட் கடிகாரம்’! கான்பூர் ஐஐடியின் அசத்தல் சாதனை…

கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில் சுமார் 49 மில்லியன் பார்வையற்றவர்களும், 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்களும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் உள்ள மொத்த பார்வையற்றவர்களில் சுமார் 20% பேர் இந்தியாவில் உள்ளனர்.  அவர்கள் ஒரு பொருளை, தொட்டு உணர்ந்தே தெரிந்துகொள்கின்றனர். ஆனால், அவர்களால் அனைத்தையும் எளிதில் உணர முடியாத நிலை உள்ளது. … Read more

பாட்னாவில் பயங்கரம்: ஜேடியு தலைவர் சௌரப் குமார் சுட்டுக்கொலை…

பாட்னா:  பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால்  சுட்டுக் கொலை  செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார் மாநில  காவல்துறை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தீவிர பிரசாரங்களை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஏற்கனவே 4 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் சில தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநில தலைவர்  பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் … Read more

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு  மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக,  பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன்  தெரிவித்து உள்ளார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி, பறக்கும்படை நடத்திய சோதனையின்போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு எடுத்துச்சென்ற ரூ.4 கோடி பணம்,  தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. … Read more

4 லட்சம் தெரு நாய்களால் ஐதராபாத்தில்  மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

ஐதராபாத் சுமார் 4 லட்சம் தெருநாய்களால் ஐத்ராபாத் நக்ரவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் கால்நடை மருத்துவர்கள் ஐதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் 90,000 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாகக் கடந்த 2022-ல் 19,847 பேரும், 2023-ல் 26,349 பேரும் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 9,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு 4 மாதத்துக்குள் மட்டும் 8 பேர் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளது பரபரப்பை … Read more

பல கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த பாஜக : பிரியங்கா காந்தி

வயநாடு பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நேற்று ல் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் எடக்காராவில் நடந்த வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டபோது கட்சியினர், பொதுமக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார். பிறகு வான்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ” மீண்டும் … Read more

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் தமிழக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இந்த … Read more

இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்: மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.  தற்போது ஜவஹர் பவன் அமைந்துள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வாழ்த்து கூறி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் மு க ஸ்டாலின், ”இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க … Read more