`ஜெயித்து விடுவோம் எனச் சொல்வது ஈசி, ஆனால்…' – மதுரையில் ராதிகா சரத்குமார் பேட்டி

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரைப்பட கலைஞர் ராதிகா சரத்குமார், சென்னையிலிருந்து இன்று காலை மதுரை வந்தார். தொண்டர்களின் வரவேற்பு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சரத்குமார், ராதிகா ஆகிய இருவருக்கும் பாஜக-வினரும், அவர்களின் ஆதரவாளர்களும் மாலையிட்டு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராதிகாவை அறிமுகப்படுத்தி பேசிய சரத்குமார், “பாரதிய ஜனதா கட்சி சொந்தங்களுக்கும் அதில் இணைந்த என் சொந்தங்களுக்கும் வணக்கம். விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவதில் … Read more

வேட்பாளர் பட்டியலை  வெளியிட்ட அமமுக

சென்னை இன்று அமமுக தனது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல்  19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண் ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது . தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் … Read more

`நான் தேனியில் போட்டியிட வேண்டுமென ஓபிஎஸ் மகன் விரும்பினார்!' – டி.டி.வி.தினகரன்

தேனி கெங்குவார்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், வேட்பாளர்களை அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பு இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “அமமுக வேட்பாளர்களாக தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகிய நானும், திருச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோரும் போட்டியிடுகிறோம். மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி மூலம் பெற்றுத் தருவேன். டிடிவி தினகரன் சாதி … Read more

நேற்று 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்த நா த க

சென்னை நேற்று தாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்தார். நாடெங்கும் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வாக்குகள் ஜூன் 4 -ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இம்முறை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  இதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. . ‘கரும்பு விவசாயி’ சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் … Read more

மயிலாடுதுறை: ராகுல் காந்தி களமிறக்கும் பிரவீன் சக்கரவர்த்திக்கு 'மண்ணின் மைந்தர்கள்' எதிர்ப்பு!

மயிலாடுதுறை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் களமிறக்கப்படுகிறவர் பிரவீன் சக்கரவர்த்தி. ஆனால் ஒவ்வொரு முறையும் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் காங்கிரஸ் பிரமுகர்கள். இதனால் மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழ்நாடு- Source Link

Weekly Horoscope: வார ராசி பலன் 24-03-2024 முதல் – 31-03-2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

காங்கிரஸின் 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டில்லி காங்கிரஸ் கட்சி தனது 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதையொட்டி பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, … Read more

`இதைச் செய்யுங்கள்… மாதத்தில் 2 நாள்கள் தேனியில் தங்குகிறேன்!' – பிரசாரத்தில் உறுதியளித்த உதயநிதி

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டியில் தேவர் சிலை முன்பு தேனி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 2019 எம்.பி தேர்தலிலும், 2021 எம்.எல்.ஏ தேர்தலிலும் உசிலம்பட்டி மக்கள் தி.மு.க-வை ஏமாற்றிவிட்டீர்கள். மறுபடியும் ஏமாற்றினால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள். கடந்த 2019-ல் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஒவ்வொரு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். … Read more

பாஜக பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயல்கிறது : அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயல்வதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நேற்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணிக் கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் ”இந்த தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை … Read more

`ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் பேரம்’ – ஜெகத்ரட்சகனை விவாதத்துக்கு அழைக்கும் பாமக பாலு

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளராக அந்தக் கட்சியின் சமூகநீதி பேரவைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கே.பாலு களமிறக்கப்பட்டிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்து வரும் பாலு, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதில் பாலுவின் பொதுநல வழக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளான அந்த மாநில … Read more