இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்: பாய்காட்டை முந்தினார் ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ஜோ ரூட் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட்டை முந்தியுள்ளார். இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,119 ரன்களை எட்டிய அவர் ஜெஃப்ரி பாய்காட்டை முந்தினார். … Read more இங்கிலாந்துக்காக அதிக ரன்கள்: பாய்காட்டை முந்தினார் ரூட்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிகள் ஏமாற்றம்

பாங்காக், டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்டில் ஆரோன் சியா- சோ வூய் யிக் (மலேசியா) இணையிடம் தோற்று நடையை கட்டியது. இதே போல் கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் அரைஇறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, … Read more தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிகள் ஏமாற்றம்

ரிஷப் பந்துக்கு கால அவகாசம் தேவை: ரித்திமான் சாஹா

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் படிப்படியாக முன்னேற்றம் காண்பாா்; அவருக்கு கால அவகாசம் தேவை என இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா தெரிவித்துள்ளாா். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணியில் மூத்த விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹாவும் இடம்பெற்றிருந்தாா். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்த நிலையில், அந்தப் போட்டியில் … Read more ரிஷப் பந்துக்கு கால அவகாசம் தேவை: ரித்திமான் சாஹா

இங்கிலாந்து தேர்வு குழு மீது வாகன் சாடல்

லண்டன், இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அணித் தேர்வு சரியில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.  இது குறித்து, ‘தற்போது இலங்கையில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் டாப்-3 வீரர்களில் ஒருவர் மட்டுமே அங்குள்ள சூழலை சமாளித்து நன்றாக விளையாடி வருகிறார். ஆனால் அந்த வீரருக்கு மட்டும் (பேர்ஸ்டோ), உள்ளூரில் வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுக்கு … Read more இங்கிலாந்து தேர்வு குழு மீது வாகன் சாடல்

ஜடேஜாவே இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர்: பந்து வீச்சு பயிற்சியாளர்

ரவீந்திர ஜடேஜா தான் இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர் என்று இந்தியாவின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜடேஜா ஆல்-ரவுண்டராக வளர்ந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த கூடுதல் பரிசு என்று கூறினார். காயம் காரணமாக சில போட்டிகளிலிருந்து விலகியிருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை அவர் பெற்றுள்ளார்.  தனது வலுவான ஆட்டத்தால் பந்து வீச்சு மற்றும் ரன்குவிப்பு ஆகிய இரண்டிலும் … Read more ஜடேஜாவே இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர்: பந்து வீச்சு பயிற்சியாளர்

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு தனது நிறுவன தயாரிப்பு காரை பரிசாக வழங்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.  மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதனை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கைப்பற்றியது. இந்த வெற்றியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்ட நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் ஷைனி, … Read more நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா

‘ஆஸ்திரேலிய அணியின் சீண்டல்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்’ – சுப்மான் கில்

இந்திய அணியின் இளம் வீரரான இவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, டெஸ்ட் போட்டியில் பட்டைய கிளப்பினார். தொடர்ச்சியாக ரன் வேட்டை நடத்தி, இந்திய அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். இவர் ஆஸ்திரேலியாவில் கிடைத்த மறக்கமுடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். * மறக்கமுடியாத அனுபவம் எது? ஆஸ்திரேலிய வீரர்களின் சீண்டல்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். நம்மை கோபப்படுத்தி, அதன் மூலம் சாதிக்க நினைப்பார்கள். அந்த ‘டிரீட்மெண்ட்’ காலத்தை, கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதுமே மறக்க மாட்டேன். * ஆஸ்திரேலிய வீரர்கள் … Read more ‘ஆஸ்திரேலிய அணியின் சீண்டல்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்’ – சுப்மான் கில்

381 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை: ரூட், பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 107 ரன்களுடனும், டிக்வெல்லா 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். … Read more 381 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை: ரூட், பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப்

புதிய மைல்கல்: மெக்ராத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆண்டர்சன்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் சிறப்பாக பந்துவீசிய ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை மொத்தம் 29 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மெக்ராத் சாதனையை சமன் … Read more புதிய மைல்கல்: மெக்ராத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆண்டர்சன்

அஸ்வின், விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய ரவி சாஸ்திரி.. மறுத்த ஷர்துல் தாக்கூர்!.. ஒரு சுவாரஸ்யம்

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின்போது, அஸ்வின் மற்றும் விஹாரியிடம் தெரிவித்த ரவி சாஸ்திரி சொல்லி அனுப்பிய தகவலை இருவரிடம் தெரிவிக்க ஷர்துல் தாக்கூர் மறைத்துவிட்டார். சிட்னியில் நடந்த 3 வது டெஸ்ட் தொடரில் அஷ்வின், விஹாரி இருவரும் கடும் நெருக்கடியிலும் போராடி ஆட்டத்தை டிராவில் முடித்தனர். அஸ்வினிடம் விஹாரி, நீங்கள் பெளன்ஸர்களை குனிந்து எதிர்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால்,அஸ்வின், குனிந்தால், நான் அப்படியே கீழே படுத்துவிடுவேன், முதுகுவலி தாங்க முடியல என்றுள்ளார். அதன்பிறகுதான், நேதன் லயன் பந்தை அஷ்வினும், … Read more அஸ்வின், விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய ரவி சாஸ்திரி.. மறுத்த ஷர்துல் தாக்கூர்!.. ஒரு சுவாரஸ்யம்