இந்துபுரம் தலைமையில் மாவட்டம் அறிவிக்கக்கோரி நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம்

திருப்பதி:

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் பரப்பளவில் பெரியதாக இருப்பதால் பல்வேறு நிகழ்வுகள் சம்பந்தமாக மாவட்ட தலைநகருக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால் நிர்வாக வசதிக்காக ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மவுன விரத போராட்டம்

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி 13 மாவட்டங்களையும் 2-ஆக பிரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தெலுங்கு வருடப்பிறப்பு அன்று புதிதாக 13 மாவட்டங்களை அறிவித்து மொத்தம் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் பாலகிருஷ்ணா மவுன விரத போராட்டம்

சித்தூர் மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டு சித்தூர் தலைமையிலும், திருப்பதி தலைமையில் பாலாஜி மாவட்டம் என்றும் பிரிக்கப்படுகிறது.

கடப்பா மாவட்டம் கடப்பா மற்றும் ஒய்.எஸ்.ஆர். என்றும், அனந்தபுரம் மாவட்டம் அனந்தபுரம் மற்றும் புட்டபர்த்தி மாவட்டம் என பிரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும், இந்துபுரம் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா புட்டபர்த்தி மாவட்டமாக அறிவித்ததை இந்துபுரம் மாவட்டமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என மவுன விரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் இந்துபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அம்பேத்கர் சிலை அருகே மவுன விரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்துபுரம் மாவட்டம் என அறிவிக்கும் வரை தொடர் மவுனவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்… புத்தக கண்காட்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.