U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 189 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து- சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
4 விக்கெட் வீழ்த்திய ரவி குமார்
4-வது வீரராக களம் இறங்கிய ஜேம்ஸ் ரிவ் சிறப்பாக விளையாடி 116 பந்தில் 95 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 44.5 ஓவரில் 189 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் ராஜ் பவா சிறப்பாக பந்து வீசி 9.5 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.
மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 9 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுதது 4 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.