இதயம் நொறுங்கிவிட்டது.. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானியின் இரங்கல்



இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்தார்.

‘பாரத ரத்னா’ லதா மங்கேஸ்கர் சமீபத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் தொற்றிலிருந்து மீண்டார்.

ஆனால், அவரது உடலுறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மீண்டும் கவலைக்கிடமான நிலையில் சனிக்கிழமையன்று மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

லதா மங்கேஷ்கர் தமிழில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில், அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த இளையராஜா தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதில், இதயம் நொறுங்கிவிட்டது, ஆனால் அவரை அறிந்ததற்கும், அவருடன் பணிபுரிந்ததற்கும் ஆசீர்வதிக்கப்படதாக உணர்கிறேன். அவரது அசாதாரணமான குரலையும் ஆன்மாவையும் நான் விரும்பினேன். லதா ஜி நம் இதயங்களில் ஈடுசெய்ய முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்.. அந்தளவுக்கு அவர் தன் குரலால் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ஒரு செலஃபீ விடீயோவையும் வெளியிட்டு அதில் தனது வேதனையை தெரிவித்துக்கொண்டார்.

அதில், தெய்வீக காந்தர்வக் குரலால் மக்களை எல்லாம் மயக்கி தன் வசம் வைத்திருந்தவர் லதா மங்கேஷ்கர். பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவு என் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவை இசையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கிற்கும் பேரிழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கும் முன்பாகவே, லதா மங்கேஷ்கருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.