செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் கட்டட வேலை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மலர் என்ற 45 வயது பெண்மணி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.
அவருடன் கரிகாலன் என்ற நபரும் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் வேலை முடிந்து பள்ளி அறை ஒன்றில் உறங்க சென்றுள்ளனர். காலை விடிந்து வெகுநேரம் ஆகியும் அறையை விட்டு அவர்கள் வெளியில் வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற வேலையாட்கள் அந்த அறைக்குச் சென்று பார்த்த பொழுது மலர் அங்கே பிணமாக கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தங்களது ஒப்பந்தக்காரர் இடம் தகவல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கரிகாலன் மற்றும் மலர் இருவரும் கள்ளகாதல் புரிந்து வந்தனர் என்றும், செவ்வாய்க்கிழமை இரவு தனியாக சென்ற இருவருக்கும் ஏதேனும் தகராறு ஏற்பட்டிருக்கக்கூடும் அதனால் மலரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.