புதுடெல்லி:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26-ம் தேதி, குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என அறிவித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட 34 அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதிய அவர் இக்கூட்டமைப்பில் இணையுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு இன்று நேரில் வழங்கினார்.
இதையடுத்து, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்பமொய்லியை நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…புதிய அதிபருக்கான வாக்கெடுப்பை புறக்கணித்த ஈராக் கட்சிகள்