பீஜிங் :
சீனாவில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கி உள்ளது. அதில் பங்கேற்பதற்காக சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
அப்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட முதலீட்டு திட்டத்தில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிக்க ஜின்பிங் உறுதி அளித்தார். மாறிவரும் உலகத்தில் சீனா-பாகிஸ்தான் பாதுகாப்பு உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார். ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளில் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா ஆர்வமாக இருப்பதாகவும் ஜின்பிங் தெரிவித்தார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தலைவரை அனுப்பிய ஒரே ஐரோப்பிய நாடு போலந்து ஆகும். அந்நாட்டின் ஜனாதிபதி ஆன்ட்ஜெஜ் துடாவும், ஜின்பிங்கை தனியாக சந்தித்தார். போலந்துடன் நட்புறவை அதிகரிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.