ராஜ்கர்:
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பச்சோர் பகுதியில் சாலை ஆக்ரமிப்பை அகற்று நடவடிக்கையில் ஆக்கிரமிப்பு தடுப்புப்பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கை அப்பகுதியை சேர்ந்த தாசில்தார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மத்திய பிரதேச மாநில பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பகவான் சிங் ராஜ்புத் அந்த நடவடிக்கையை கைவிடுமாறு எச்சரித்தார்.
திடீரென அவர் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை தாசில்தார் ராஜேஷ் சோர்டே மீது வீசினார்.அருகில் நின்று கொண்டிருந்த ஆக்கிரமிப்பு தடுப்புப் பிரிவினர் மீதும் பெட்ரோல் பட்ட நிலையில் அவர்களை தீ வைத்து எரிக்கப் போவதாக பகவான் சிங் கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தலைமை நகராட்சி அதிகாரி பவன் மிஸ்ரா காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் பகவான் சிங் ராஜ்புத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் டிபி லோஹியா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்- ஒவைசிக்கு அமித் ஷா வேண்டுகோள்