ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி: சீரம் நிறுவனத்துக்கு அனுமதி!

தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை திரிபானது வேகமாக பரவும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாலும், உலக அளவில்
ஒமைக்ரான்
பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது, சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் பரவல் காணப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் பரவிய ஒமைக்ரான், சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசின் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா ஒமைக்ரான் திரிபுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு டிசிஜிஐ அனுமதி வழங்கியுள்ளது.

பரிசோதனை மற்றும் பகுப்பாய்வுக்காக கொரோனா வைரசின் ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் முன்மொழிவுக்கு மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோவிஷீல்டு
தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்துக்கு இந்த அனுமதி கடந்த 4ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ஜனவரி 6 ஆம் தேதி மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு விண்ணப்பித்திருந்தார். அதில், Novavax Inc உடன் இணைந்து, ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சோதனை மற்றும் பகுப்பாய்வுக்காக SARS-CoV-2rS மருந்துப் பொருளைத் தயாரிப்பதற்கான அனுமதியையும், உரிமத்தையும் சீரம் நிறுவனம் பெற்றுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த தடுப்பூசியின் உருவாக்கம், நமது பிரதமரின் ‘Making in India for the World’ என்ற உறுதியான அழைப்பிற்கு இணங்க, நமது நாட்டின் தடுப்பூசி உற்பத்தி வலிமைக்கு மற்றொரு உதாரணமாக இருக்கும் எனவும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.