குடும்ப கடனை அடைப்பதில் தகராறு : தந்தையை கொலை செய்த தாய், மகன் <!– குடும்ப கடனை அடைப்பதில் தகராறு : தந்தையை கொலை செய்த தாய்,… –>

கோவையில் குடும்ப கடனை யார் அடைப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியும் மகனும் சேர்ந்து தாக்கியதில் கணவர் உயிரிழந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி குடும்பத்தாருக்கு 8 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. குடி பழக்கம் கொண்ட பழனிசாமி பலரிடம் கடன் வாங்கி மது குடித்து வந்ததாக கூறப்படும் நிலையில்,கடந்த 3 மாதங்களாக கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக பழனிசாமிக்கும், அவரது மனைவி ஜானகி, மகன் சுபாஷ் இடையே அடிக்கடி பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படும் நிலையில், பழனிசாமி பெயரில் இருக்கும் நிலத்தை விற்று கடனை அடைக்க மகனும் மனைவியும் முடிவு செய்துள்ளனர்.

அதுதொடர்பாக  தந்தை மகன் இருவருக்கும் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மகனும் மனைவியும் சேர்ந்து பழனிசாமியை கீழே தள்ளியதில் காயமடைந்த பழனிசாமி வீட்டின் திண்ணையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் சென்றுவிட்டு காலையில் வந்து பார்த்தபோது பழனிசாமி பேச்சு மூச்சு இன்றி கிடந்ததாக கூறப்படுகிறது.108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்த நிலையில், பழனிசாமி உயிரிழந்தது தெரியவந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.